முஸ்லிம்களுக்கு தயட கிருள - தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஹராமாகும்- ஆசாத் சாலி


முஸ்லிம்களுக்கு தயட கிருள - தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஹராமாகும் என முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார். இதனால் முஸ்லிம்கள் எவரும் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளக் கூடாது எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை அம்பாறை நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மத்தலவையில் ராஜபக்ஷ சர்வதே விமான நிலைய திறப்பு விழாவில் சிறுபான்மையின மத நிகழ்வுகள் இடம்பெறவில்லை. இதனால் சிறுபான்மை இன மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனவும் அசாத் சாலி தெரிவித்தார்.

சிறுபான்மை இனங்கள் புறக்கணிக்கப்பட்டபோது, முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் பைசால் காசீம் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் குறித்த நிகழ்வை புறக்கணித்திருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார். TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :