பஞ்சமா பாதங்களற்ற சமூகமொன்றை உருவாக்க வேண்டுமென்றே இஸ்லாம் மார்க்கம் கூறுகிறது- அஸ்வர்


பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் அவரவர் சமயங்களை இடையூறின்றி பின்பற்றுவதற்கும் ஒவ்வொருவர்களினதும் மத உணர்வுகளை மதித்து நடப்பதற்கும் முன்வர வேண்டும் என ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் குழு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் அண்மையில் கூடியது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

பஞ்சமா பாதங்களற்ற சமூகமொன்றை உருவாக்க வேண்டுமென்றே இஸ்லாம் மார்க்கம் கூறுகிறது. அதேவேளை, ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும் வலியுறுத்துகிறது.

முஸ்லிம்களின் தலைவர்களான டி.பி. ஜாயா, வைத்தியர் எம்.சீ.எம். கலீல், சேர் ராசிக் பரீத், பதியூதீன் மஹ்மூத், சேர் முஹம்மது மார்க்கார் ஆகியோர் பிற மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்ததுடன் தமது மார்க்கத்தையும் செவ்வனே பின்பற்றி நடந்தவர்கள்.

அவ்வாறே எமது நாட்டின் முன்னாள் தலைவர்களான டி.எஸ். சேனாநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் , எஸ். தொண்டமான் போன்றோரும் ஏனைய மதங்களுக்கு மதிப்பளித்து நடந்து காட்டியவர்கள்.

இந்நிலையில் ஜோன் அமரதுங்க எம்.பி. பாராளுமன்ற உணவகத்தில் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி என்பன உணவுக்காக வைக்கப்பட வேண்டுமென கோரிக்கையொன்றை முன்வைத்தார். அவரின் மேற்படி வேண்டுகோளுக்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக சபாநாயகர் பாராளுமன்ற உணவகத்தில் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி என்பன விற்பனை செய்யக்கூடாது என தடை விதித்தார்.

ஜோன் அமரதுங்க முன்னோர்களின் முன்மாதிரிகளை பின்பற்றி ஏனைய மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும்.

நாம் பாராளுமன்றத்துக்கு வந்து செல்வது சாப்பிடுவதற்காகவல்ல. மக்களின் பிரதிநிதிகளான நாம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கூறி அவற்றுக்குத் தீர்வு காண்பதுடன் நாட்டின் நலன்களின் விடயங்களை கலந்தாலோசித்து திட்டங்களை முன்னெடுப்பதற்காகவாகும் எனவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :