மியான்மரில் முஸ்லிம் மற்றும் புத்த மத பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
மியான்மரின் மெய்க்திலா பகுதியில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரின் தங்கநகைக் கடை ஒன்றில் புத்த துறவி ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவம், புதன்கிழமை நடந்தது.
இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் வீதியில் சண்டையிடத் தொடங்கினர். இதுவே கலவரத்துக்குக் காரணம் என்று பொலிஸாரின் அதிகாரப் பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் புத்த துறவி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இதனால், ஆத்திரமடைந்த புத்த மதத்தினர், அப்பகுதியில் இருந்த 3 மசூதிகளை இடித்தனர். இதனையடுத்து கலவரத்தைக் கடுப்படுத்த அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.
இதேபோன்று முஸ்லிம் பிரிவினருக்கும், புத்த மத பிரிவினருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 180 பேர் உயிரிழந்தனர்
0 comments :
Post a Comment