முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பாதிக்கும் விடையங்களை தவிசாளர் பஷீர் சேகுதாவூத் செய்திருக்கிறார்- தலைவர் ஹக்கீம்.

கட்சியின் தலைமைத்துவத்திற்கு தெரியாமல் அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்ட பஷீர்ஷேகு தாவூத், அவர் கட்சியில் வகிக்கும் தவிசாளர் பதவியை துறந்திருக்க வேண்டும் என நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பஷீர் ஷேகுதாவூத் கட்சிக்குத் தெரியாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவை பெற்றமையானது பிழையான முடிவாகும். அது தொடர்பில் கட்சி கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

அவர் ஏற்கனவே கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது பிரதியமைச்சுப் பதவியை துறந்தார். அந்த சந்தர்ப்பத்தில் பஷீர் எடுத்த முடிவானது கட்சியை பாதிக்கக் கூடியதாக இருந்தது. அதன்போது நான் கடுமையான நடவடிக்கை எடுக்க முற்பட்டவேளை கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் நிதானமாக நடந்துகொள்ளுமாறு தெரிவித்தனர். கட்சி தலைமை என்ற ரீதியில் நான் மென்மையாக நடந்து கொண்டேன் .

தமது கட்சியை பாதிக்கும் வகையில் செயற்படும் போது கட்சியை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் தலைமை என்றால் என்ன என்பதை தேர்தல் காலங்களின் போது தெரிந்துகொள்வார்கள் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :