பெண்களின் ஊர்வலமும், மகஜர் கையளிப்பும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்திப்பிரிவு மற்றும் மனித எழச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகளை  வெளியிடும் போது '
அரச அறிவித்தல்-பெண்களுக்கு எதிரான வன்முறை தண்டனைக்குரிய குற்றம்' என காட்சிப்படுத்தல் வேண்டும் எனக் கோரி அமைதி ஊர்வலமும், மகஜர் கையளிப்பும்  அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக இடம் பெற்றது. 

இதன் போது பிரதேச மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் பதாதைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுக்கக் கோரும் சுலோக அட்டைகளுடன் ஊர்வலாமாகச் செல்வதையும்,

 உதவி பிரதேச செயலாளர் எஸ். ஜெயரூபனிடம் மகஜர் கையளிப்பதையும், மகளிர் அபிவிரத்தி உத்தியோகத்தர் எம்.வை.எம்.சுஹைறா மற்றும் மனித எழுச்சி நிறுவனத்தின் உத்தியொகத்தர் எம்.பவானி, மகளிர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி ஜனுசா உள்ளிட்டோர் முறையிடுவதையும் காணலாம்.JM



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :