அக்கரைப்பற்று நகரில் ஹெட்ஸ் (HEDS) இன்ரெநெஷனல் என்னும் பெயரில் கல்விக்கூடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் முழுக்க முழுக்க மாணவர்களின் கல்விமேம்பாடு கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் இயங்குனர் எம். வாஹிட் (உதவிக் கல்விப்பணிப்பாளர்) தெரிவிக்கின்றார்.
பாடசாலைக் கல்விக்கு உயிர் ஊட்டுகின்ற ஒரு திட்டமாக நாடுமுழுவதும் வியாபித்துள்ள தனியார் கல்விக்கூடங்கள் மாணவர்களின் நலனில் அதிக அக்கரைகொண்டு உழைப்பதில் தவறிவிடுகின்றமை பரவலாக அறியப்பட்டுள்ள ஒரு விடயமாகும்.
குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிகமான தனியார் கல்விக் கூடங்கள் மாணவர்கள் நிம்மதியாக இருந்து கற்பதற்குரிய இடமாக காணப்படாமை, அதிக பண அறவீடு போன்றன காரணமாக மாலை நேர வகுப்புக்களுக்கு செல்வதிலிருந்து மாணவர்கள் விடுபடுகின்ற ஒரு நிலைமையும் காணப்படுகின்றது.
இதனை மாற்றியமைக்கும் எண்ணத்தில் மாணவர்களினதும், அவர்களது பெற்றோர்களினதும் ஆசையை நிறைவேற்றி மாணவர்கள் நிம்மதியாகவும், அமைதியான சூழலில் இருந்தும் கற்பதற்கான ஒரு நிலையமாக நவீன வகுப்பறைகளும், நவீன கற்பித்தல் உபகரணங்களுடன் ஹெட்ஸ் இன்ரெநெஷனல் கல்விக்கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு எவ்வாறான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பன பற்ற்pய இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கினை இன்று(03.03.2013) மாலை 4.30மணிக்கு அக்கரைப்பற்று அதாஉல்லா மண்டபத்தில் நடைபெறுகின்றது.
இதில் விசேட உரையினை வழங்கவிருக்கும் எம். வாஹிட் இந்த நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும், மாணவர்களுக்காக விசேடமாக அமைக்கப்பட்டுள்ள இக்கூடத்தின் நன்மைகள் பற்றியும் எடுத்துக் கூறவுள்ளார். இக்கருத்தரங்குக்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியலாளர்கள், மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதான இயக்குனர் எம்.வாஹிட் தெரிவித்தார்.
(mdhrkp)
0 comments :
Post a Comment