ஹனீஸ் முஹம்மத் சாய்ந்தமருது
ஒரு வருடத்திற்கு மேலாக பேசப்பட்ட, பேரினவாதிகளால் எதிர்க்கப்பட்ட ஹலால் விடயத்திற்கு ஒரு மாதிரியாக
வெற்றியோ-தோல்வியோ, சதகமாவோ-பாதகமாகவோ,நடுநிலையகவோ முடிவு
ஓன்று தற்காலிகமாக கிடைக்கபெற்று விட்டது.
ஆனால் இனிவரும் புதிய புதிய எதிர்ப்புக்களும், குற்றச்சாட்டுகளுக்கும்
எப்படி பதில் கொடுப்பது? எப்படி
அதிலிருந்தது விடுபடுவது?
எப்படி அதற்க்கான
பதில் நடவடிக்கையை மேற்க்கொள்வது?இந்த கேள்விகளுக்கு விடைகாண்பதற்கு முன்னால் இவையெல்லாம் யாரால் முன்னடுக்கப்படுவது? இதுதான் இங்குள்ள
பெரியோரு கேள்வியாகும்.
முஸ்லிம் சமூகம் நேரடியாக களத்தில் குதிப்பதா?
உலமா சபையின் தலையில் ஒட்டுமொத்தமாக விட்டுவிடுவதா?
முஸ்லிம் சமூக அமைப்புக்களில் பொறுப்பில் விடுவதா?
இதுதான் இப்போதுள்ள பிரச்சினை,
கடந்த ஹலால் பிரச்சினைய வைத்து பார்க்கபோனால் நமது உலமா சபையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, பலதரப்பட்ட விமர்ச்சனகளுக்கு உள்ளாகியும் இந்த சமுதாயதிற்கு எதோ ஒரு வகையில் ஒரு விடயத்தினை ஆக்கபுவர்வமாக செய்தார்கள். நமது முஸ்லிம் ஊடகத்தினரின் பங்களிப்பும் சொல்லகூடிய ஒன்றாகும்.
மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது,
நமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பு என்ன?
அவர்களின் ஹலாலுக்கான ஒரு செயற்பாட்டைகூட நம்மால் காண முடியாமல் இருக்கின்றது. ஒவ்வொரு அமைச்சுப் பதவிகளுக்காகவும் தனித்தனி கட்சிகளையும், குர் ஆனை யும் ஹதீசையும் கூறி எடுத்த எம்.பி பதவிகளையும், தனி ஒரு முஸ்லிம் முதலமைச்சர் சபையை கொண்ட மகாண சபயையும், இன்னும் பல முஸ்லிம் மாநகர சபைகளையும், நகர சபைகளையும், பிரதேச சபை உறுப்பினர்களையும் கொண்ட இந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் இந்த ஹலால் பிரச்சணைக்காக என்ன பங்களிப்பு செய்தார்கள்.
காத்திரமான பங்களிப்பு எதுவும் இல்லை என்பதுதான் ஒரு கசப்பான உண்மை.
ஒரு சில குரல்கள் ஒலித்ததே தவிர விவேகமாக அப்துல் சத்தாரும் வேகமாக ஆசாத் சாலி போன்றோர்களை தவிர மற்ற முஸ்லிம் தலைவர்களின் தொண்டைக்குள் பிட்டையும் தேங்காபூவைவும் வைத்து அடைத்தவர்கள் யாரு?
கைகளில் சூப்பனை கொடுத்து வாய்களுக்கு உனைக்க கொடுத்தவர்கள் யாரு?
எதனால் இவர்களால் ஒரு ஆக்கபுர்வமான ஒரு செயற்பாட்டை செய்ய முடியவில்லை?
ஒரு பாராளமன்ற பகிஸ்கரிப்பு, ஒரு அக்கிரோசமான பாராளமன்ற பேச்சு, இல்லை ஊடகத்திலாவது ஒரு அறிக்கை, குறைந்த பட்சம் பாராளமன்றத்தில் கருப்பு நிற ஆடையை அணிந்தவது, இதையல்லாம் விட்டுவிட்டு எதோ ஒரு முடிவு கிடைத்ததுடன் உலா சபைக்கு எதிராக கண்டன அறிக்கைகள். அவர்களது நாடகத்தை இறைவன் விடயத்திலும் கட்டுகிறார்கள்.
வெளிநாட்டு தூதுக்களை சந்திக்க முந்தி அடிதிக்கொள்ளும் முஸ்லிம் கட்சி தலைவர்களின் சாமர்தியப்பேச்சு எங்கே போனது. விருப்பு வாக்கு பெற்றுக் கொள்வதில் உள்ள தீவிரம் ஹலால், மற்றும் முஸ்லிம் பிரச்சனைகளில் காணாமல் இருப்பதன் காரணம் என்ன?
முஸ்லிம்களின் அடையாளமாக உள்ள கிழக்கு மாகண சபை ஒரு கண்டன பிரேரனையுடன் தனது பணியை முடித்துக்கொண்டது. வெளிநாடுகளுக்கு நிதி சேகரிப்புக்கு செல்லவும், வெறும் கட்டடங்ளை கட்டுவதற்கு அரசுடன் பேச்சுக்களை நடாத்தும் மாகண சபை, ஹலால் பிரச்சனைக்கு ஒரு உத்தியோர்புர்வ
சந்திப்பு ஒன்றினை நடத்த முடியாமல் போனதுக்கு காரணம் என்ன?
நாடு எதிர்பார்த்து இருந்த மார்ச் 11ம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நாட்டின் ஒரு மூலையில், அடுத்த தலைவர் அமைச்சர் அதாவுல்லாஹ் ஒரு பாராட்டு விழா மேடையில்,
இன்னொரு தலைவர் அமைச்சர் ரிஷாத் திறப்பு விழா வைபவத்தில் இதுதான் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலையாக இருந்தது. எதற்காக இவர்களுக்கு இப்படி ஒரு போடு போக்கு தன்மை?ஏன் இவர்களுக்கும் ஹலாலு க்கும் சம்மந்தம் இல்லையா? இல்லை, ஹலால் உண்பது இல்லையா?
நாம் செய்யவேன்டியது
முஸ்லிம் சமூகமே போராளிகள் என்று சொல்லி கொண்டு திரியும் போராளிகளே! நீங்கள் தீவிரமாகவும் ஆழமாகவும் சிந்திக்க வேண்டும். இவர்களின் அக்கறையின்மைக்கான கரணம் என்ன? இவர்களின் இப்படியான செயற்பாட்டை எப்போதும் நாம் அனுமதிப்பதா?
சமூகத்திற்கு பிரயோசனம் இல்லாமலும் செல்லா காசாகவும் இருக்கும் அரசியல்வாதிகளை பிரதேச சபை உறுப்பினர்கள் தொடக்கம் அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் வரை களைய வேண்டும்.இரு தலை நச்சு பாம்புகளை நம் பிரதேசங்களில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்.
எதனுடாக தீர்வு?
நமது முஸ்லிம் சமூகம் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச் .எம் அஷ்ரபினால் அரசியல் மயப்படுத்தப் பட்டு தெருவுக்கு ஒரு, மக்கள் பிரதிநிதியை கொண்டுள்ளது.
இவர்களை எல்லாம் நம்ப முடியாமல் முஸ்லிம் சமூகமே தமது பிரச்சனைகளை சொந்தக் காலில் நின்று சுமப்பதா? இப்படியான ஒரு சந்தர்ப்பத்திட்கு நாம் ஒரு போதும் இடமளிக்ககூடாது. முஸ்லிம் சமூகம் அரசியல் தலைவர்களின் துணை இன்றி சொந்தமாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்படும் போது பெரும் ஆபத்துக்களையும் பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
விரும்பியோ விரும்பாமலோ சமுதாய அக்கறை கொண்ட அரசியல் தலைமைகளுக்கு ஊடாகத்தான் உலமாக்களின் வழிகாட்டுதலுடன் நமது சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இதுவே நமது வருங்கால சந்ததியினருக்கும் ஏற்புடையதாக இருக்கும்.
0 comments :
Post a Comment