ஏழு வயதான சிறுவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பகுதியில் ஏழு வயதான சிறுவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வட்டவான் தான்தோன்றீஸ்வரர் வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் பவானந்தன் விதுஷன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அயல் வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர்த் தாகம் எடுக்கவே வீட்டிலிருந்த கிணற்றில் நீரை அள்ளிப்பருக இந்தச் சிறுவன் முயற்சி செய்துள்ளான். 

கிணற்று வாளியில் கட்டப்பட்டிருந்த கயிறு நீளம் குறைந்ததாக இருந்த படியால் சிறுவன் தானாக உந்தித் தள்ளி கிணற்றில் குனிந்து நீரை அள்ள முயற்சித்துள்ளார். அப்பொழுது கால்கள் பிடியிழந்து 7 அடி ஆழத்திற்கு நீர் நிறைந்து காணப்பட்ட கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார். 

அயலவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்டெடுத்து அலிஒலுவ வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிறுவன் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெருகல் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :