வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதல்.


இலங்கையில் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்துவந்த ஹலால் குறித்த விவகாரத்தில் இனிமேல் ஹலால் சான்றிதழுக்குப் பதிலாக விற்பனைக்கு வரும் ஒவ்வொரு பொருளுக்கும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படைப் பொருட்களின் விபரங்களை மாத்திரம் குறிப்பிடுவது என்று முடிவு காணப்பட்டுள்ளதாக முஸ்லிம் மீடியா தலைவர் என். எம். அமீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.



இது குறித்து இரு தினங்களுக்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் நடந்த சந்திப்பில் இலங்கை வர்த்தக சம்மேளனம், மூத்த பௌத்த தலைவர்கள் மற்றும் உலமாக்கள் சபை ஆகியன இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வழமை போலவே ஹலால் சான்றிதழ் பொறிப்பது என்றும் அதற்கான செலவை மறைமுகமாக இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பது என்றும் அங்கு முடிவு காணப்பட்டதாகவும் அமீன் அவர்கள் கூறினார்.
அதேவேளை, உள்நாட்டைப் பொறுத்தவரை ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்துவது என்றும், அதற்குப் பதிலாக விற்பனை செய்யப்படும் பொருட்களில் அவற்றின் மூலப்பொருட்களின் உள்ளடக்க விபரங்களை பொறிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட ஹலால் சன்றிதழ்கள் நிறைய இருப்பதால், எதிர்வரும் 6 மாதங்களுக்கு மாத்திரம் தொடர்ந்தும் அவற்றை அனுமதிப்பது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் எழுப்பிய பொதுபல சேனா அமைப்பு இந்த முடிவை ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டதற்குப் பதிலளித்த செய்தியாளர் அமீன் அவர்கள், பல அதிகாரம் மிக்க மூத்த பௌத்த பிக்குக்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பதால், அவர்கள் இதனை ஏற்பார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், இது குறித்து திங்களன்று நடக்கவிருக்கும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறித்த மூத்த பிக்குமார் பௌத்த மக்களுக்கு இதன் முக்கியத்துவத்தை விளக்குவார்கள் என்றும் கூறினார்.BBC.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :