VV-பாணந்துறை, எழுவில பிரதேசத்தில் உள்ள வக்கட பெளத்தாலோக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் நாளை முதல் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என அந்த பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் வழமையாக முஸ்லிம் மாணவியர் அணியும் கலாசார உடையினையும் தடை செய்து சிங்கள மாணவியர் அணிவதைப் போன்றே உடையணிந்து வரவேண்டும் எனவும் அவர் வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பெற்றோரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தற்சமயம் எழுவில ஜும்ஆ பள்ளிவாசலில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது. குறித்த கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானமொன்று எட்டப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை குறித்த பாடசாலையின் அதிபராக பெளத்த தேரர் ஒருவரே கடமையாற்றுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
.
0 comments :
Post a Comment