கல்முனைப் பிரதேச வீதி அபிவிருத்தி திட்டத்தினால் தமது அரசியல் இருப்பிடத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என சிலர் அச்சம் .-உதுமாலெப்பை.

கல்முனைப் பிரதேச வீதி அபிவிருத்தி திட்டத்தினால் தமது அரசியல் இருப்பிடத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என சில அரசியல் வாதிகள் அஞ்சி பிரதேசவாத உணர்வுகளை கல்முனை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வீதி அபிவிருத்தி திட்டங்களை நீண்ட காலமாக தடைசெய்து வருவதாக எம்.எஸ்.உதுமாலெப்பை குற்றஞ்சாட்டியுள்ளார். 

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக கடந்த 2008ம் ஆண்டில் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அத்தாவுல்லாஹ் சிபாரிசுடன் ஜனாதிபதி என்னை அமைச்சராக நியமித்தார். 

எமது அமைச்சின் ஊடாக கடந்த 4,1/2 வருட காலமாக கிழக்கு மாகாணத்தில் போரினாலும், இயற்கை அனார்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட கிராமிய வீதிகளை அடையாளம் கண்டு நன்கு திட்டமிட்ட முறையில் வீதி அபிவிருத்தி திட்டங்களை இன பேதம் இன்றி மூன்று இன மக்கள் வாழும் பிரதேசங்களில் நிறைவேற்றி வருகின்றேன்.


 எனக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது. அப்படி உதுமாலெப்பைக்கு அமைச்சு பதவி வழங்கினால் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அமைக்கும் விடயத்தில் அரசுக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என முஸ்லிம் காங்கிரஸ் வீரம் பேசிய போதும் தேசிய காங்கிரஸ்சின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதா உல்லாஹ் அவர்களின் சிபாரிசுடன் ஜனாதிபதி என்னை மீண்டும் நமது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி துறைக்கு அமைச்சராக நியமித்துள்ளார். 

கடந்த நான்கு வருட காலத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்தி பணியில் நியாயமாக செயல்பட்டு வந்தோம். 

கிழக்கு மாகாணத்தின் எமது அமைச்சின் அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக நிலையான சமாதானத்திற்கும், இன உறவுகள் வளர்ச்சி அடைவதற்கும் பெறும் பணிபுரிந்து வருகின்றேன். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டால் கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசல்வீதி, 39 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மானம் செய்வதற்கான ஆரம்ப வைபவம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்றது.


 இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்முனைக்குடி அல்பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தேசிய காங்கிரஸ் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சர் அதாவுல்லாஹ் எப்போதும் கல்முனை மக்களை நேசிப்பவர் மறைந்த தலைவர் மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஷ்ரப்பை அன்று அழித்து விட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியும் பலமிக்க அமைச்சர்களும் கங்கனம் கட்டிக்கொண்டு செயற்பட்ட வேளையில் அமைச்சர் அதாஉல்லாஹ் பெரும் தலைவர் அஷ்ரப்பின் அரசியல் பாதைக்கு உரமாக இருந்து செயற்பட்டார்.


அது மாத்திரம் இன்றி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு எதிராக பிரதேச வாதத்தை பரப்பிய போதிலும் துணிந்து நின்று தலைவர் அஸ்ரப்புடன் இணைந்து கட்சியை வளர்த்தவர். கல்முனைகுடி மக்கள் தலைவர் அஷ்ரப் அவர்களின் வேண்டுகோள்படி பொதுத் தேர்தலில் அமைச்சர் அதாஉல்லாஹ்க்கு அன்று வாக்களித்தீர்கள் அந்த உறவுகள் இன்னும் தலைவரிடம் உள்ளது. 

கல்முனை மக்களுக்கு அமைச்சர் அதாஉல்லாவும் நானும் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கல்முனை மக்கள் மத்தியில் பிரதேசவாத உணர்வுகளை தூண்டி அபிவிருத்தி திட்டங்களை சில அரசியல் வாதிகள் தடைசெய்கின்றனர். கல்முனை பிரதேச மக்களுக்காக அமைச்சர் அதா உல்லா அவர்களால் வழங்கப்பட்ட பாலம் ஒன்று பல ஆண்டு காலமாக பாவிக்கப்படாமல் இருந்தன. 

கல்முனை பிரதேச வீதி அபிவிருத்தியில் பாகுபாடு காட்டப்படுவதாக உண்மைக்கு மாறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி கடந்த பல வருட காலமாக கல்முனை பிரதேசத்தில் திட்டமிட்ட முறையில் வீதி அபிவிருத்தி பணிகளை மேற்;கொள்வதற்கு சிலர் தடையாக உள்ளனர். கல்முனை பிரதேசத்தில் எமது அமைச்சினால் திட்டமிட்ட முறையில் பல கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்டு பல வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

கல்முனை, பாலிகா மகளீர் கல்லூரி, கல்முனை சாகிரா கல்லூரி வீதி, கல்முனை கடற்கரை வீதி, கல்முனை ஜூம்மா பள்ளிவாசல்வீதி, கடற்கரை பள்ளி வீதிகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதிக்கு பணம் ஒதுக்கப்பட்டு வீதி அபிவிருத்தி பணி ஆரம்பிக்கப்பட்டது. 


கடற்கரை பள்ளி வீதியை போட வேண்டாம் என சில அரசியல் வாதிகள் தடைசெய்தனர். இரவோடு இரவாக வீதி ஆரம்பித்த பெயர் பலகையை சேதம் செய்தனர். தேர்தல் காலங்களில் மக்களை உணர்வூட்டி பதவிகளுக்கு வருகின்ற இவர்களால் முடிந்தளவு மக்களுக்கு பணி செய்ய வாய்ப்பு உள்ளது அதை எப்படி செய்வது என்பது பற்றி அனுபவம் இல்லை. அபிவிருத்தி செய்பவர்களை விடுவதும் இல்லை. இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும். 

கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது முஸ்லிம்களின் பள்ளிவாசல் உடைக்கப்படுவதாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று மத்தி அரசாங்க அமைச்சரவையிலும் மாகாண அமைச்சரவையிலும் நான்கு அமைச்சு பதவிகள் பெற்றுள்ளது. அவர்களால் முடிந்த அளவு நமது கிழக்கு மாகாண மக்களுக்கு நிறைய அபிவிருத்தி செய்ய கூடிய வாய்ப்புள்ளது இதனை விட்டு விட்டு எங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கு நாங்கள் அபிவிருத்தி செய்ய முன்வரும் போது தடைசெய்வதுடன் பிரதேசவாத உணர்வுகளை தூண்டி வருகின்றனர். பிரதேச வாதத்தை மூலதனமாக கொண்ட அரசியல் வாதிகளின் வரலாறு நிலைத்ததில்லை. 

அன்று கிழக்கு மாகாணம் முழுவதும் பிரதேச வாதம் தலைவிரித்தாடியது பிரதேச வாதங்கள் மூலம் பேரினவாத கட்சிகள் சார்பில் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதற்காகவே எமது முஸ்லிம் ஊர்களை மோதவிட்டு அன்றைய நமது அரசியல் வாதிகள் செயல்பட்டனர். 

தலைவர் அஷ்ரப் கிழக்கில்; தலைவிரித்தாடிய பிரதேச வாதத்தை இல்லாமல் செய்தார். பிரதேச வாதத்தை உருவாக்கி அரசியலுக்கு வந்தவர்களின் அரசியல் வரலாறு நமது கண்முன்னே அழிந்து போய் உள்ளது என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

அஷ்ரப், தேசிய காங்கிரஸ்சின் தலைவர் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் கொள்கையில் பணிபுரியும் நான் கிழக்கு மாகாணத்தில் பிரதேச இன வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால்பட்டு; பணி புரிந்து வருகின்றேன். ஒற்றுமையாக வாழும் மக்கள் மத்தியில் நாங்கள் ஒரு போதும் அரசியலுக்காக குழப்பங்களை ஏற்படுத்துவதில்லை. 

நமது நாட்டில் பயங்கரவாதம் நீண்ட காலத்திற்கு பின் அழிக்கப்பட்டுள்ளது. அதன் தொடராக தற்போது இனவாதம் என்ற படுநோய் ஆரம்பித்தள்ளது. இன வாதத்தை இல்லாமல் செய்வதற்கு நாம் ஒற்றுமைப்பட்டு செயற்படுவது போன்று எதிர்காலத்தில் பிரதேச வாத உணர்வுகளை தூண்டும் சக்திகளையும் நாம் இல்லாமல் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு நமக்கு உள்ளது. 

அரசியல் அதிகாரம் ஒரு நிலையான விடயம் இல்லை. தேசிய காங்கிரஸ் தலைவரின் வழிகாட்டலின் கீழ் எனக்கு வழங்கப்பட்ட இந்த அமைச்சின் மூலம் கிழக்கு மாகாணம் முழுவதும் பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் பணிபுரிந்து வருகின்றேன். 

கல்முனை பிரதேச வீதி அபிவிருத்தி தொடர்பான பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எமது அமைச்சின் அதிகாரிகளுக்கு கல்முனை பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி தொடர்பான திட்டங்களை அடையாளம் காணுமாறு பணிப்புரை வழங்கி உள்ளேன். நீண்ட காலமாக அதிகாரிகளினால் நிர்வகிக்கப்பட்டு வந்த நமது கிழக்கு மாகாணம் 2008, 2012ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடைய அபிலாசைகளை நிறைவு செய்வதற்கும் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் பெரும் பணி புரிந்து வருகிறது. இவ் பிரதேச மக்கள் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விடயங்களில் நமது எதிர்கால மக்களின் நன்மைக்காக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். 

கல்முனைப் பிரதேசத்தில் இருந்து வந்த கிழக்கு மாகாண சபையின் பிரதிநிதித்துவம் கடந்த மாகாணசபை தேர்தலின் போது இல்லாமல் போனது வேதனைக்கு உரிய விடயமாகும். முஸ்லிம் காங்கிரஸ்காரர்களே அனுபவம், ஆளுமைமிக்க முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை தோக்கடித்துள்ளார்கள். 

தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அதா உல்லாஹ் அவர்கள் கல்முனை பிரதேசத்துக்கு ஆபத்து வருகின்ற போது எப்போதும் பக்கபலமாக இருந்து செயற்பட்டுள்ளார் என்பதனை கல்முனைப் பிரதேச மக்கள் நன்கு அறிவார்கள். தேசிய காங்கிரஸிக்கு அரசியல் அதிகாரங்கள் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் முழு கிழக்கு மாகாணத்தின் நிரந்தரமான அமைதிக்கும், அபிவிருத்திற்கும் தனது பங்கினை வழங்கி வந்துள்ளது எனக் குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :