அமைச்சர் நஷீர் அஹமடின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சை அடித்து நொருக்கிய அமைச்சின் செயலாளர்.படங்கள்


திருகோணமலை வரோதயநகர் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் இன்று (20) காலை 09.15 மணியளவில் விவசாய அமைச்சர் நசீர் அஹமட்டின் இணைப்புச் செயலாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா பெரிய சுத்தியலுடன் நுழைந்து அமைச்சு அலுவலக கண்காடிகள், கனணிகள் மற்றும் அலுவலகத்திலிருந்து பல பொருட்களை அடித்து நொருக்கி உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளார்.

இதன்போது பிரதம கணக்காரளரின் அலுவலக அறைக் கதவு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய பல பகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பீதியடைந்த உத்தியோகத்தர்கள் மாகாண பிரதம செயலாளரிடம் சென்று தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தம்மை வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் வழங்குமாறும் அல்லது குறித்த இணைப்புச் செயலாளரை பதவியிலிருந்து நீக்குமாறும் முறையிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பிரதம செயலாளர் ஆராய்ந்து முடிவு செய்வதாக தெரிவித்துள்ளார்.

உத்தியோகத்தர்கள் குறித்த இணைப்புச் செயலாளரை பதவியிலிருந்து இடைநிறுத்தும் பட்சத்தில் தாம் அலுவலகத்தில் கடமை புரிய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களது அடாவடித்தனம் மிக நீண்ட நாட்களாக இருந்து வந்தபோதிலும் தற்போது இது உக்கிரமடைந்து உத்தியோகத்தர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடும் அளவிற்கு அதிகரித்தள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு உத்தியோகத்தர்கள் சுதந்திரமாக கடமைபுரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :