துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் சவூதியின் அமைச்சர்கள் குழு ஆராய்ந்து வருவதாக சவூதியின் உள்ளூர் தினசிரயான அல் வதான் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியானது அதன் ஞாயிறு பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த செய்தியை உத்தியோகபூர்வமாக உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு பதிலாக மரணத்தை ஏற்படுத்தும் விஷ ஊசி மூலம் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வல்லுறவு, கொலை, மத நிந்தனை , ஆயுதம் தாங்கிய கொள்ளை, போதை பொருட் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக சவூதி அரேபிய இராச்சியத்தில் ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படுகின்றது.
அந் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு 79 பேருக்கும் 2012 ஆம் ஆண்டு 76 பேருக்கு தலை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இதுவரையில் 15 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.VV
0 comments :
Post a Comment