கல்முனை சந்தை வீதி, வடிகான் என்பன அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று


(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை சந்தை வீதி, வடிகான் என்பன அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று (05.03.2013) காலை  மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

புற நெகும அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 7,490,103.44 ரூபா செலவில் குறித்த வீதி, வடிகான் என்பன அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், எச்.எம்.எம்.நபார், சந்தை வர்தக சங்க பிரதிநிதிகள், சர்வ மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மூவின மக்களும் பயணிக்கும் இப்பிரதான வீதி பல வருடங்களாக குன்றும் குழியுமாக காணப்பட்டது. அத்தோடு மழை காலங்களில் இவ்வீதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுண்டு. இதனால் மக்கள் பெரும்  அசௌகரியங்களை எதிர்நோக்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :