தேசத்தற்கு மகுடம் கண்காட்சியினை பார்ப்பதற்கு முஸ்லிம்கள் செல்லாதது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.
அம்பாறையில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.
இக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமையுடன் நான்கு தினங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் எவரும் இக் கண்காட்சியினை பார்க்க செல்லாததால் கண்காட்சி ஏற்பாட்டாளர்களும், பொலிஸ் அதிகாரிகளும் முஸ்லிம்கள் இக்கண்காட்சியினை பார்ப்பதற்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.
இது விடயமாக உயரதிகாரிகள் பலரிடமும் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
சாதரண பொஸன் நிகழ்ச்சியினை கூட பார்ப்பதற்கு பெருமளவில் செல்லும் முஸ்லிம்கள் ஏன் இந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை பார்ப்பதற்கு செல்லவில்லை என்று வினா எழுப்பப்படுகின்றது.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முஸ்லிம்கள் அதிகளவாக உள்ள அம்பாறை மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தொகையான முஸ்லிம்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து அணி திரண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் முஸ்லிம்கள் இதற்கு செல்லாதது குறித்து பாரிய கேள்வி எழும்பியுள்ளது.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை பார்ப்பது முஸ்லிம்களுக்கு ஹறாம் என அன்மையில் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் ஆசாத் சாலி விடுத்த அறிக்கை, முஸ்லிம்களின் ஹலால் விவகாரத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட விதம், பொது பல சேனா எனும் சிங்கள அமைப்பு முஸ்லிம்களுக்கெதிராக செய்து வரும் அநீதிகளை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பதும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் உடையை சில இடங்களில் கழற்று வதற்கு முற்பட்டமை போன்ற காரணங்கள் முஸ்லிம்கள் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை பார்ப்பதற்கு போகாமலுள்ள காரணங்களாக இருக்க முடியுமா என்றும் விணா எழுப்பப்படுகின்றது.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திங்கட்கிழமை (இன்று) முஸ்லிம்களுக்கு பொது பல சேனாவினால் நடாத்தப்பட்டு வரும் அநீதியினை கண்டித்து உனர்வு பூர்வமான ஹர்தால் கடையடைப்பும் அம்பாறை மாவட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களிலும் வடக்கிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதுவும் முஸ்லிம்கள் விழிப்புனர்வுடன் உள்ளார்கள் என்பதை மிக தெளிவாக காட்டுகின்றது.
தற்போதய சூழ் நிலையில் பொறுமையாகவும் அமைதியாகவும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ளும் முஸ்லிம்கள் அமைதியாக சில விடயங்களுக்கு எதிர்ப்பு காட்டி வருகின்றனர் என்பதற்கு நல்ல உதாரணம்தான் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை பார்க்க செல்லாமைக்கான முக்கிய காரணியாகும்.
பொது பல சேனா எனும் அமைப்புக்கெதிராக இந்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்பதையும் அரசாங்க ஆதரவிலேயே முஸ்லிம்களுக்கெதிரன அநீதியான நடவடிக்கைகளை பொதுபல சேனா செய்து வருகின்றது என்ற விடயமும் முஸ்லிம்களுக்குள் உலாவுகின்றது.
இப்படியான நிலையில் அரசாங்கம் செய்யும் இந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை ஏன் முஸ்லிம்கள் சென்று பார்க்க வேண்டும் என்ற விணாவும் முஸ்லிம் சமூகத்தினால் எழுப்பப்டுகின்றது.
கடந்த கால யுத்தத்தில் முஸ்லிம்கள் இந்த நாட்டு அரச படைக்கு முஸ்லிம்கள் செய்த அளப்பரிய பங்களிப்பினை அரசாங்கமும் இந்த பொதுபல சேனா அமைப்பும் மறந்து செயற்படுகின்றதா என்ற கேள்வியும் முஸ்லிம்களிடம் உண்டு.
யுதத்தத்தில் முஸ்லிம் இராணுவீரர்கள் கொல்லப்பட்டார்கள், முஸ்லிம் பொலீஸ் காரார்கள் கொல்லப்பட்டார்கள், ஆயிரக்கணக்கான முஸ்லிம் பொதுமக்களும் கொல்லப்பட்டதுடன் முஸ்லிம்கள் அகதிகளாய், அநாதைகளாக பரிதவித்ததையும் தமது சொந்த இடங்களை விட்டு முஸ்லிம்கள் வெளியேறியதையும் இன்னும் தமது சொந்த இடங்களில் கால் வைக்கமுடியாமல் முஸ்லிம்களில் பலர் பரிதவிப்பதையும் முஸ்லிம் சமூகம் ஒரு முறை சுட்டிக்காட்டுகின்றது.
யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான விவசாய ஏக்கர் காணிகளை இழந்துள்ள முஸ்லிம் சமூகம் தொழுகையில் கூட விடுதலைப்புலிப் பயங்கராதிகளின் கொடூரமான தாக்குதலில் பலரை இழந்துள்ளது.
முஸ்லிம் சமூகம் தமது தாய் நாட்டிற்கு விசுவாசமாக இருந்து வரும் நிலையில் முஸ்லிம்கள் தமது மார்க்க கடமையை கூட செய்ய முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது குறித்து கவலையுடன் இருக்கும் நிலையில் இந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை பார்க்க வேண்டுமா என்ற மிகப்பெரிய கேள்வியினையும் கேட்கின்றது.
ஜெனீவாவில் அரசுக்கு ஆதராவக வாக்களிப்பதற்கு முஸ்லிம்கள் தேவை, மத்தள விமான நிலையத்தில் முதல் விமானம் வந்து தரை இறங்கு வதற்கு ஹலால் நாட்டு விமானமான எயர் அரேபியா விமானம் தேவை இவ்வாறல்லாம் முஸ்லிம் நாடுகள் இந்த நாட்டுக்கு உதவுகின்ற போதும் ஏன் இந்த நாட்டு அரசாங்கம் முஸ்லிம்களின் அடிப்பட ஈமானிலும் வணக்க வழிபாடுகளிலும் கை வைக்க வேண்டும் என்றும் முஸ்லிம் சமூகம் கேட்கின்றது.
இவற்றையெல்லாம் விளங்கிக்கொண்ட முஸ்லிம் சமூகம் இன்று இந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை புறக்கணித்து வருவதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
கடந்த யுத்தத்தின் போது வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பட்ட துன்பத்தில் தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகம் துயரடைந்ததுடன் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு உதவியும் செய்துள்ளது.
தற்போது தென்னிலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சூழ் நிலையில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பிராத்தனை செய்து வருவதுடன் உணர்வு பூர்வமான ஹர்தாளையும் அனுஷ்டித்துள்ளதுடன் தேசத்திற்கு மகுடம் எனும் கண்காட்சியினையையும் புறக்கணித்துள்ளார்கள்.
இதை சம்பந்தப்பட்டோர் தெளிவாக விளங்கிக் கொண்டால் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முஸ்லிம்கள் ஏன் பார்க்க செல்லவில்லை என்பதற்கான விடயத்தின தெரிந்து கொள்ள முடியும்.
நன்றி KI
0 comments :
Post a Comment