ஹலால் விடயம் ஒரு கொள்ளை முயற்சி. ஜம்இய்யதுல் உலமா சபையை கலைத்து விடுங்கள்- டிலாந்த விதானகே


முஸ்லிம்கள் ஹலால் உணவை உட்கொள்வற்கு நாம் எதிர்ப்பு இல்லை. ஆனால் நடைமுறையிலுள்ள ஹலால் விடயம் ஒரு கொள்ளை முயற்சி. ஜம்இய்யதுல் உலமா சபையை கலைத்து விடுங்கள். ஜம்இய்யதுல் உலமாவால் முஸ்லிகம்களின் உரிமைகளை பெற்று கொடுக்க முடியவில்லையெனின் பொது பல சேனா அதனைப் பெற்றுக் கொடுக்கும் என பொது பல சேனாவின் தேசிய இணைப்பாளர் டிலாந்த விதானகே தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாம் பர்­தா­வை­யும் எதிர்க்கிறோம். சம்பிரதாய முஸ்லிம்கள் பர்தாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பர்தாவிலிருந்து தம்மை மீட்டுத் தருமாறு எம்மிடம் வேண்டுகிறார்கள்.

முஸ்லிம் அடிப்படைவாதிகள்தான் முஸ்லிம் மக்களை சிக்கலுக்குட்படுத்துகிறார்கள். பள்ளிவாசலை உடைக்கிறார்கள். அடிப்படைவாத அமைப்புகள் இந்நாட்டை ஷரிஆ சட்டத்திற்குட்படுத்த முனை­கின்­ற­ன. இப்­போது கட்டணம் பெறாமல் ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கும் தயார் எனக் குறிப்பிடுகிறார்கள். அவ்­வா­றாயின் அவ்விடயத்தில் இலாபம் இல்லை என்று கடந்த காலங்களில் குறிப்­பிட்­ட­து பொய்தானே. ஹலால் சான்றிதழுக்காகப் பெற்ற கட்டணங்களை நிறுவனங்களுக்கு மீள செலுத்த வேண்டும்.

இந்த அடிப்படைவாத பிரிவினர் 4500 உற்பத்திகளை ஹலாக்கி விட்டார்கள். இப்பொருட்களை உபயோகித்து நாம் செய்யும் வணக்க வழிபாடுகள் நிறைவேறுமா?

முழுமையாக கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட வாகனங்களையே இந்நாட்டில் பயன்படுத்த முடியாத போது முழுமையான கறுப்­­பு பர்தா உடையை அனுமதிக்க முடியுமா? பௌத்த வியாபாரிகள் ஹலால் விடயத்தை விலக்கிக் கொண்டால் நாம் அவர்களுக்கு உதவி செய்வோம் எனவும் தெரிவித்தார்.  VV
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :