நாமே நமது அபிவிருத்தியை திட்டமிடுவோம்


(எஸ்.அஷ்ரப்கான்)
நமது அறிவையும், திறமையையும்இயலுமையையும், வழங்களையும் பயன்படுத்தி நாமே நமது அபிவிருத்தியை திட்டமிடுவோம் எனும் தொனிப்பொருளில் எமது ஊரின் கல்வி, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் மருத்துவம், உட்கட்டுமானம் ஆகியவற்றிற்கு அபிவிருத்திக் குழுக்களை நியமித்து நற்பிட்டிமுனைக் கிராமத்தினை இப்பிரதேசத்தின் சிறந்த முன்மாதிரிக் கிராமமாக 5 வருடத்திற்குள் முன்னேற்ற திறந்த பாதையைத் திட்டமிடுவோம். என்று நற்பிட்டிமுனையில் தனது கட்சி ஆதரவாளர்கள், ஊர் முக்கியஸ்தர்களுடனான விசேட ஒன்று கூடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் கூறினார்.
அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,
தற்போது நற்பிட்டிமுனைக்கிராமம் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தினைக் கண்டு வருகிறது. ஆனால் திட்டமிடப்படாத சில நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு தடைகளும் இதில் காணப்படுகின்றது. நாம் கல்வியினை எடுத்து நோக்குகின்றபோது இம்முறை எண்ணிறைந்த மாணவர்கள் மருத்துவ பீடம், பொறியியல் பீடம், முகாமைத்துவ பீடம், கலைப்பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதுபோன்று கல்வியியற் கல்லுரிக்கும் தெரிவுசெய்யப்பட்டிருப்பது பெருமை சேர்க்கின்றது. இங்குள்ள திறைமையான மாணவர்களை கொண்டதாக எமதுரின் கல்வி முன்னேறிச் செல்கிறது.
விளையாட்டுத்துறையினை எடுத்து நோக்கும்போது, நற்பிட்டிமுனையின் விளையாட்டு அஷ்ரப் சதுக்க விளையாட்டு மைதானம் மிக பின்தங்கிய ஒரு நிலையில் காணப்படுகின்றது. அரசியல் பிரமுகர்களால் கைவிடப்பட்டதாக காணப்படுகின்றது. இந்த விளையாட்டு மைதானத்தை புனர் நிர்மானம் செய்வதற்கு ஊரினுடைய புத்தி ஜீவிகள், விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஒன்றுபட்டு எமது மைதானத்தினை புனர்நிர்மாணம் செய்ய ஒன்றுபடுவதோடு, பாடசாலை மட்டத்திலிருந்தே விளையாட்டு வீரர்களை மேலோங்கச் செய்வதன் மூலமாக இலங்கையின் தற்போதைய விளையாட்டுத்துறையில் இளம் வீரர்கள் இடம்பிடித்துவரும் இக்கால கட்டத்தில் எமது பிரதேசத்திலிருந்தும் தேசிய மட்டத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த முயல வேண்டும். இதற்கு பிரதானதானமாக தேவைப்படும் மைதானம் இல்லை என்பதால் கல்வி, விளைளாட்டுத்துறையில் எமது பிரதேசம் பின்தங்கும் நிலைக்கு சென்றவிடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது.
அதுபோல் நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு பிரதேசங்களை மையப்படுத்துகின்ற ஒரு மருத்துவமனை இருக்கின்றது. இதனை எமது பிரதேச கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் உதவியுடன் சகல வசதிகளும் கொண்ட மருத்துவ மனையாக உருவாக்க முடியாதா? சேவைகளை வழங்க முடியாதா? என்று நற்பிட்டிமனைக்கிராமத்தின் அபிவிருத்தி இதர விடயங்களில் அக்கறை கொள்ளுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
ஆகவே, இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கு அரசியல் கட்சி வேறுபாடு தனிப்பட்ட குரோதங்களுக்கப்பால் சென்று ஊரின் நலன்களைப்பற்றி சிந்திப்பதற்கு அணைத்து அரசியல்வாதிகளும், புத்தி ஜீவிகளும், கலவிமான்களும் ஒன்றுபட வேண்டும் என்ற வேண்டுகோளையும் நபார் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :