கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் சுபைர் அவர்கள் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைக்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கிவைத்தார்.



காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் வேண்டுதலின் பேரில் போட்டோ பிரதி இயந்திரம் ஒன்று கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர், பிரபல சமூக சேவையாளருமான கௌரவ அல்ஹாஜ எம். எஸ். சுபைர் JP/MPC அவர்களினால் வழங்கி வைக்கப்ப்பட்டது.

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் மௌலவி அல்ஹாஜ் எஸ். எம். அலியார் (பலாஹி) தலைமையில் (16.03.2013 சனிக்கிழமை) இன்று இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம். எஸ். சுபைர், முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே. எல். எம். பரீட் JP உட்பட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மௌலவி அல்ஹாஜ் எஸ். எம். அலியார் (பலாஹி) தலைமையுரை நிகழ்த்துகையில் கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர், பிரபல சமூக சேவையாளருமான கௌரவ அல்ஹாஜ் எம். எஸ். சுபைர் JP/MPC அவா்களின் சமூகப் பணி மகத்தானது அவா் எமது ஜம்இய்யாவுக்கு உதவுவது இது இரண்டாவது தடவையாகும் என்றார்.

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஆரம்ப கால வரலாறும் அதன் தற்கால வழா்ச்சி, சிறந்த செயல்பாடுகள், இலங்கையின் சமகால நிகழ்வு தொடர்பாகவும் மிக சிறப்பான உரை ஒன்றினை அஷ்-ஷெய்ஹ் M. றிஸ்வான் (மதனி) BA அவா்கள் நிகழ்த்தினார். கௌரவ அல்ஹாஜ் எம். எஸ். சுபைர் JP/MPC உரையாற்றுகையில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயல்பாடுகளைப் பார்த்து நான் மிகவும் சந்தோசமடைகின்றேன். காத்தான்குடி ஜம்இய்யாவின் செயல்பாடுகள் யாவும் மிக சிறந்த எடுத்துக்காட்டாகவே உள்ளது.

அரசியல் வாதிகளை விட உலமாக்களாகிய உங்களுடைய பணி மகத்தானது. சமூகத்துனுடைய தேவைகளை இனம் கண்டு அதனை மிக சிறப்பாக செயல்படுத்தக் கூடிய சகல வல்லமையும் உங்களுக்கே உள்ளது என்றார்.

இவ்வாறான சிறப்பு மிக்க நிகழ்வினில் கலந்து கொண்டமைக்கு நான் அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி செலுத்துகின்றேன். எதிர் காலங்களில் இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :