கல்முனை மாநகர சபையில் கட்சி பாகுபாடு காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன் -நபார்.

(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார் நற்பிட்டிமுனையின் அஷ்ரப் சதுக்க பொது விளையாட்டு மைதானத்தை  மாநகர சபையின் ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு சென்று அண்மையில் சுத்தம் செய்திருந்தார். இதனை அறிந்த பிரிதொரு மருதமுனையைச் சேர்ந்த ஆளும் ஸ்ரீ.ல. மு.காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். உமர் அலி, மாற்றுக்கட்சி (ஐ.தே.கட்சி) காரருக்கு வழங்கப்படக்கூடாது என கூறியதாகவும், கட்சி வேறுபாடு காட்டப்படும் இந்த பாகுபாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.

இதுவிடயமாக அவர் மேலும் கருத்தினை வெளியிடும்போது,

நற்பிட்டிமுனைக் கிராமம் அரசியல், சமூக விடயங்கள் ரீதியாக ஏனைய கிராமங்களுக்கு அடிமைக் கிராமமல்ல. நற்பிட்டிமுனை அஷ்ரப் சதுக்கத்தினை புனர் நிர்மானம் செய்ய வேண்டுமென்று கல்முனை மாநகர சபையினுடைய நட்பிட்டிமுனையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் அயராது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக கல்முனை மாநகர சபை முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் அவர்களும் உறுதுணையாக இருந்துகொண்டிருக்கின்றார். இதே போன்று இப்பிரதேசத்து ஏனைய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் எமது நற்பிட்டிமுனைக் கிராமத்தின் அபிவிருத்திக்கு உதவி செய்யாவிடாலும் உபத்திரம் செய்யக்கூடாது. நான் எனது சொந்த தேவைகளுக்காக மாநகர சபைச் சொத்தை பயன்படுத்தவில்லை.
நற்பிட்டிமுனைக் கிராமம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்அஷ்ரப்அவர்களால் ”தாறுஸ்ஸலாம்” அமைதி இல்லம் என்ற பெயருடன் அன்று அழைக்கப்பட்டதுஇவ்வாறானபெருமைமிக்க ஊரின் அவல நிலைகண்டு எமது ஊரின் மைதானத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில்  முயற்சிமேற்கொண்டு வருகிறேன்இதனை சக உறுப்பினர் தடுப்பது போன்று பேசியிருப்பது வேதனையளிக்கிறது.
எமது முயற்சியினால் நற்பிட்டிமுனை அஷ்ரப் சதுக்க விளையாட்டு மைதானத்தினை இப்பகுதியின் சிறந்த ஒரு மைதானமாக உருவாக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில்,மருதமுனையைச்சேர்ந்த எமது சக மாநகர சபை உறுப்பினர் கட்சி பேதத்தை  காட்டி இவ்வாறு  கூறியமை பெரும் கவலையளிக்கிறது.  
நற்பிட்டிமுனைக் கிராமம் அதை அண்டியுள்ள அயல் கிராமத்திற்கு அடிமைக்கிராமமல்ல. இக்கிராமமும் அரசியல் பலம் படைத்த கிராமமாகும் என்பதனை ஏனைய பிரதேசத்து அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுவிடயமாக சம்மந்தப்பட்ட கல்முனை மாநகர சபை ஆளும் தரப்பு உறுப்பினர் எம்.எஸ். உமரலியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு, 


முதலில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் நபார், சபையின் ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு சென்று சுத்தம் செய்த இந்த விடயத்தை நான் சிறிதும் அறிந்தவனாக இருக்கவில்லை. ஊடகவியலாளர் நீங்கள் கேட்டபோதே இதனை நான் அறிந்து கொண்டேன். இந்த விடயத்தை முதலில் நான் வர வேற்கின்றேன். முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்பாக இருக்கும்போது, எதிர்தரப்பு (ஐ.தே.கட்சி) உறுப்பினருக்கு இந்த  இயந்திரத்தை வழங்கியமை எமது கட்சியின் பெரும் தன்மையைக் காட்டுகிறது. இது வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால், உறுப்பினர் நபார் யாரும் கதைப்பதைக் கேட்டுக்கொண்டு என்னை குற்றம் சுமத்தி அறிக்கை விடுவது வருந்தத்தக்க விடயமாகும். இந்த விடயத்தை நான் கூறியதாக உறுப்பினர் நபாருக்கு தெரிவித்தவரை வெளிப்படையாக தெரியப்படுத்துமாறு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சகோதரர் நபாரை கேட்டுக்கொள்கின்றேன்.கட்சி பேதங்களுக்கப்பால் சகல உறுப்பினர்களையும் அரவணைத்துச்செல்லுமாறுதான் நாம் கூறிவருகின்றோம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :