தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான அசாத் சாலியின் கொழும்பு அலுவலகம் இன்று (21.3.2013) மாலை பொலிசாரினால் சோதனை செய்யபப்பட்டுள்ளதுடன், அவரது வீடும் பொலிசாரினால் சோதனை செய்யப்பட்டுள்ளன.
அசாத் சாலியின் கொழும்பு பான்ஸ் பிளேஸ் வீதியிலுள்ள அலுவலகத்திற்கு மூன்று பொலிஸ் ஜீப் வண்டியில் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு சோதனை செய்ய முற்பட்ட போது அங்கு அலுவலகம் மூடப்பட்டிருந்ததால் அங்கிருந்த அவரது கொமும்பு பிளவர் வீதியிலுள்ள வீட்டுக்கு சென்று வீட்டை சோதனை செய்துள்ளனர்.
இதன் போது அசாத்சாலி வீட்டில் இருக்கவில்லை என தெரியவருகின்றது. அசாத்சாலியை கைது செய்வதற்காக பொலிசார் அங்கு சென்றிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது வாழைச்சேனை ஜும்ஆ பபள்ளிவாயலில் வைத்து அசாத் சாலியை தாக்கமுற்பட்ட சம்பவம் தொடர்பின் பின்னணியிலேயே அசாத்சாலியை இன்று பொலிசார் கைது சென்றதாகவும் தெரிய வருகின்றது.
கடந்த வாரம் கொள்ளுப்பிட்டி பொலிசாரினால் இந்த வாழைச்சேனை சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பெறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான அசாத் சாலியை நாளை கொழும்பிலுள்ள பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பொலிசார் அழைப்பானை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment