உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் அட்டாளைச்சேனைப் பிரதேச சபை திட்டமிட்டு புறக்கணிப்பு.


(எஸ்.எம்.அறூஸ்)

உள்ளுராட்சி மகாணசபைகள் அமைச்சினால் அம்பாரை மாவட்டத்திலுள்ள எட்டு உள்ளுராட்சி சபைகளுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபை முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முதல் நாள் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தில் நடைபெற்ற வாகனங்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டு வாகனங்களை உள்ளுராட்சி சபைத் தலைவர்களிடம் கையளித்தார்.

அம்பாரை மாவட்டத்திலுள்ள தெஹியத்தக்கண்டிய, மகாஓயா, தமன, உஹன பொத்துவில், நிந்தவூர் பிரதேச சபைகளுக்கும், அக்கறைப்பற்று மாநகர சபை, கல்முனை மாநகர சபை என்பவற்றுக்குமே வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகின்ற சபைகளாகும். ஏற்கனவே அம்பாரை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை, இறக்காமம், அக்கறைப்பற்று மாநகர சபை, அக்கறைப்பற்று பிரதேச சபை என்பவற்றிற்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் பார்க்கின்றபோது, அம்பாரை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் உள்ளுராட்சி சபைகளில் அட்டாளைச்சேனையைத் தவிர ஏனைய சபைகள் அனைத்திற்கும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சபையாகும். அதுமட்டுமல்ல அமைச்சா அதாஉல்லா தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் பிரதேசமும் ஆகும். உதுமாலெப்பை மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளராகவும், உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய முஸ்லிம் கிராமங்களையும் தீகவாபி என்கின்ற சிங்களக் கிராமத்தையும் திராய்க்கேணி என்கின்ற தமிழ்க் கிராமத்தையும உள்ளடக்கிய பரந்த சபையாகும். பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் தமது கடமைகளை நாளாந்தம் மேற்கொள்கின்றனர்.

அம்பாரை மாவட்டத்திலுள்ள ஏனைய சபைகளை விட கூடுதலான சனத்தொகையையும், பரந்த நிலப்பரப்பையும் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை போதுமான தேவைக்கான வாகன வசதி இன்றி கஸ்டப்படுகின்ற நிலையில் உள்ளுராட்சி அமைச்சர் அதாஉல்லா இந்த சபைக்கு வாகனம் வழங்காமல் புறக்கணித்திருப்பது இப்பிரதேச மக்களை கவலையடையச் செய்துள்ளது.

திண்மக்கழிவு அகற்றலில் சிறந்த சபைக்கான பரிசினைப் பெற்றுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபை இனப்பாகுபாடின்றி தமது கடமையைச் செய்து வருகின்றது. இவ்வாறான சபைக்கு ஏன்? வுhகனம் வழங்கப்படவில்லை. ஏன்ற கேள்வி இன்று அரசியல் மட்டத்தில் பலமாக எழுப்பப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி அமைச்சிற்கு முஸ்லிம் ஒருவர் அமைச்சராக இருக்கின்ற நிலையில் முஸ்லிம் பிரதேச சபை ஒன்றை வேண்டுமென்றே புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.
 அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அமைச்சர் அதாஉல்லா தரப்பைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்கு பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் கட்சிப்பாகுபாடின்றி வேலைத்திட்டங்களில் முன்னுரிமை வழங்குகின்றார்.

கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் சொந்த இடம் என்பதாலும், அமைச்சர் அதாஉல்லாவின் அயல் கிராமம் என்பதாலும் தமது அரசியலுக்கு ஆபத்து என்பதாலேயே அட்டாளைச்சேனை பிரதேச சபையை இவர்கள் தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாகவும் தற்போது கதைகள் அடிபடுகின்றது.

அட்டாளைச்சேனை மக்களின் அபிவிருத்திக்காக பாடுபடுவதாக மேடைக்கு மேடை முழங்கும் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தேலையாகக் காணப்படுகின்ற வாகன வசதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை  எடுக்காதது ஏன்? ஏன மக்கள் கேட்கின்றனர்.

இது இவ்வாறிருக்க, அக்கறைப்பற்று மாநகர சபை அமைச்சர் அதாஉல்லாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அதுமட்டுமல்ல அவரது மகன் மேயராகவும் உள்ளார். அந்த சபைக்கு இரண்டாவது முறையாகவும் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதை என்னவென்று சொல்வது.
 
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு வாகனம் வழங்கப்படாதது கட்சி சார்பை ஒதுக்கி வைத்துவிட்டு ஒட்டுமொத்த அட்டாளைச்சேனை பிரதேச மக்களையும் அமைச்சர் அதாஉல்லா அவமதித்துள்ளார் என்பதாகும் என அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

எனவே, அட்டாளைச்சேனை மண்ணின் மைந்தன் என மார்பு தட்டும் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார். பொறுத்திருந்து பார்ப்போம். உள்ளுராட்சி அமைச்சிற்கு சிங்களவர் ஒருவர் அமைச்சராக இருந்திருந்தால் எல்லாம் சரியாக நடந்திருக்கும் என்கின்றனர் விமர்சகர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :