யாழ். மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவார்களானால் அவர்களை பாதுகாப்பதற்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான சம்பவங்களை அனுமதிக்க முடியாது. ஊடகவியலாளர்களை பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவர்கள் சமூகத்திற்கு உண்மையைச் செல்பவர்கள் அவர்களைத் தாக்குபவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை எங்களுடையது.
நாங்கள் விசாரணை மேற்கொள்கின்றோம். விசாரணையின் போது சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்படுபவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம். வலம்புரி பத்திரிகையின் பத்திரிகையாளர் தக்கப்பட்டதும் யாழ்.பிராந்திய பொலிஸ் மா அதிபர் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வைத்தியசாலையில் வைத்து கொடுக்குமாறு பணித்தார்.
இதேபோன்று உடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் ஆலோசித்து வருவதாக யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா மேலும் தெரிவித்துள்ளார். AD
0 comments :
Post a Comment