போர் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது, இதனால் வடகிழக்கு மக்களுக்கு என்ன பலன் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய.




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது போல்,  போர் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுவதால், வடபகுதியில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வுக்கு எந்த நிவாரணங்கள் கிடைக்க போகின்றன என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். 

வடபகுதியில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க சர்வதேசம் தலையிட வேண்டும் என டி.என்.ஏ. கூறுகிறது. இதுதான் அவர்களின் நிகழ்ச்சி நிரல்,  சாதாரண தமிழ் மக்களுக்கு இதனால் ஏற்பட போகும் நன்மை என்ன என நான் கேள்வி எழுப்புகிறேன். தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை எப்படி பெற்றுக்கொடுக்கலாம் என்பதை பற்றியே அவர்கள் பேச வேண்டும்.

போர் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. இதன் மூலம் எவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வறிய மக்களின் வாழ்வுக்கு நன்மை ஏற்படப் போகிறது.  மாகாணங்களில் உள்ள வீதிகளை புனரமைக்கும் தேவை அந்த மக்களுக்கு உள்ளது. அதனை இராணுவம் மேற்கொண்டு வருகிறது.  வடக்கில் உள்ள பெருபாலான மக்களின் பிள்ளைகளை விடுதலைப்புலிகள் பலவந்தமாக போருக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உழைப்பவர்கள் உயிரிழந்து விட்டனர்.

ஆடை உற்பத்தியாளர்களிடம் வடக்கில் தொழிற்சாலைகளை அமைக்குமாறு கோரினேன். எனினும் தொழிலுக்கு தகுதியானவர்கள் அங்கு இல்லை என்பதே உற்பத்தியாளர்களின் பிரச்சினை.  இதனால், டி.என்.ஏ. செய்ய வேண்டியது இந்த மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதாகும்.  இதனை விடுத்து, ஜெனிவாவுக்கு சென்று மனித உரிமைகள் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் அந்த மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எப்படி உதவ முடியும்.


தமிழகத்தில் இருந்து சென்று மீன்பிடிக்கும் படகுகளினால் யாருடைய தொழில் பாதிக்கின்றது. வடக்கில் உள்ள மீனவர்களின் தொழிலே பாதிக்கப்படுகிறது. எனினும். டி.என்.ஏ. அது குறித்து பேசுவதில்லை.  அவர்கள் தமிழகத்திற்கு சென்று இந்த பிரச்சினை பற்றி பேசுவதில்லை. 

ஜெயலலிதாவுக்கு இலங்கை தமிழ் மக்கள் மீது அன்பிருந்தால், சட்டவிரோதமாக வடக்கு, கிழக்கில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும். 30 வருடங்களுக்கு பின்னர், வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது வாழ்க்கையை ஆரம்பிக்கும், அவர்கள் வடக்கில் உள்ள மீனவர்களின் வாழ்க்கையை அழிக்கின்றனர்.  இவை இந்திய அரசியலின் வேலைகள். தமிழக மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துகின்றனர் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.JM

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :