டிசம்பருக்கு முன்னர் இலத்திரனியல் அடையாள அட்டை.



டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகமாகும் என்றும் இதன் மூலம் அடையாள அட்டைகளிலான குளறுபடிகள் நீங்குமென்றும் ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். எம். என். சரத் குமார தெரிவித்தார்இலத்திரனியல் அடையாள அட்டைகளை தயாரிக்கும் பணியில் 800 பயிலுனர் பட்டதாரிகள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

332 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 332 அலகுகளுக்காக தரவுகளை இவர்கள் சேகரிப்பர். டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகமாகும். 

இதன் மூலம் அடையாள அட்டைகளிலான குளறுபடிகள் நீங்குமென்றும் அவர் தெரிவித்தார்.இம்முறை ஜீ. சீ. ஈ. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.2013 அக்டோபர் 31 ஆம் திகதி 16 வயதைப் பூர்த்தி செய்த மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.அதிபர்கள் ஊடாக தற்போது முதல் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இருவாரங்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் சரத்குமார தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :