நேற்று புத்தளத்தில் நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கண்டிக்கிறோம்


(அபூ தனா)

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் என்றுமில்லாதவாறு பெரும் சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ள இச்சிக்கல்நிறைந்த ஒரு காலகட்டத்தில் நமது கண்ணை நாமே குத்திக்கொண்டதுபோல ஒரு ஆர்ப்பாட்டம் தேவையா?  முதலில் இதனைக்கண்டிப்பதுடன் கவலையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹலால் பிரச்சினை,பள்ளிகள்மீதான தாக்குதல்கள்,பூர்வீகப்பகுதிகளில் இருந்து வெளியேற்றல்,ஹிஜாப் மீதான தாக்குதல்,ஏக இறைவனுக்கு எதிரான கோசங்கள்,மாடு அறுப்பதற்கு எதிரான தாக்குதல்கள்,முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்கவேண்டாம் என்ற பிரச்சாரங்கள்,முஸ்லிம்கட்கு காணிகள் விற்கக்கூடாது என்ற பரப்புரைகள்,இஸ்லாமிய சரியாச் சட்டங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள்,ஊடகத்தாக்குதல்கள் என்று சமகால முஸ்லிம் பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கமுடியாத நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகளும்,பொதுமக்களும்,புத்திஜீவிகளும் .உலமாக்களும் இருப்பதை நாம் யாவரும் அறிவோம் ஒரு எதிர்நடவடிக்கையோ,ஆர்ப்பாட்டமோ செய்யமுடியாத ஒரு கையறு நிலையில் நாம் இருக்கிறோம்.

ஒரு முஸ்லிம்அமைச்சர் குரல் கொடுக்கும்போது அவ் அமைச்சருக்கு எதிராக இனவாத சக்திப hய்வதைக் காணக்கூடியதாக உள்ளது.உதாரணம்.....வடக்கை அமைச்சர் றிசாத் தலைமையிலான முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாகவும் இதைத்தடுக்க பௌத்தர்களும் ,இந்துக்களும் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒரு பொதுபலசேன பௌத்தபிக்கு அறிக்கைவிட்டதை நாம் மறந்திருக்கமுடியாது.

மீண்டும் ஒரு 1915 ஐ உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்;படுகின்றன.இக்காலகட்டத்தில் கட்சிவாத,இயக்கவாத,பிரதேசவாத.சுயநலவாத முரண்பாடுகளை தூக்கி எறிந்துவிட்டு நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டிய தேவை எப்போதையும்விட இப்போது அதிகம் வேண்டப்படுகிறது.ஒரு கட்டிடத்தின் செங்கல் எப்படி மற்றைய செங்கல்லை கெட்டியாகப்பிடித்துக்கொண்டுள்ளதோ அவ்வாறே நாம் இருக்கவேண்டும்.
புத்தளம் முஸ்லிம்களும், வடபுலமுஸ்லிம்களும் இரண்டறக்கலந்துவிட்டார்கள்.இவர்களிடையே பலமான கலாசார உறவுகளும்,திருமண உறவுகளும் பலமான அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

புத்தளம் முஸ்லிம்கள் அடைக்கலம் தேடிவந்த வடபுல முஸ்லிம்களை வரவேற்றதையும்,தமது அதிகபட்ச உதவிகளைச்செய்ததையும்,தமது நியாயமான உரிமைகளைக்கூட விட்டுக்கொடுத்ததையும் தன்மானமுள்ள வடபுல முஸ்லிம் ஒருபோதும் மறக்கமாட்டான்
மக்காவிலிருந்து மதினா வந்த முஸ்லிம்கட்கு எப்படியெல்லாம் மதினா அன்சாரிகள் உதவிசெய்தார்களோ ;அப்படியான உதவிகளைச்செய்து அன்சாரிகளின் அந்தஸ்தை புத்தளம் மக்கள் அடைந்துவிட்டனர்.இந்த நல்லிதயம் பெற்றவர்களின் வாழ்நிலையை இறைவன் மேலும் சிறப்பாக்கி வைப்பான்.

சிறுசிறு சுயலாப அரசியலுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதையும் வடபுலமுஸ்லிம்களின் மனதைப்புண்படுத்துவதையும் ஒரு போதும் புத்தளம் மக்கள் விரும்பமாட்டார்கள்.டொக்டர் ஐதுருஸ் இல்யாஸ் அவர்களை வடபுலமுஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்து அழகு பார்த்ததையும் மறக்கத்தான் முடியுமா?

இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்களில் அரச மட்டத்தில் அதிகம் செல்வாக்குப்பெற்ற, சனாதிபதியின் அதிக நம்பிக்கைக்குரிய ஒருவராக அமைச்சர் றிசாத் அவர்கள் என்றால் அது வடபுலமுஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான புகழ்மட்டும் அல்ல .அது புத்தளம் மக்களுக்குமான புகழாகவே கருதப்படல் வேண்டும்
நாட்டில்  எங்காவது முஸ்லிம் மக்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அமைச்சர் றிசாத் ஆகத்தான் இருக்கும்.இவர் வடபுலத்தையும்,புத்தளத்தையும் தனது இரு கண்ளகள்போல நேசிக்கிறார்.புத்தளத்திற்கு முஸ்லிம் பாராளுமன்றப்பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற ஒரே கவலையில் புத்தளப்பிரதேச அபிவிருத்தியிலும் அக்கறை காட்டுகிறார்.

ஏனைய அரசியல்வாதிகளையோ,அரசியல் கட்சிகளையோ பலவீனப்படுத்தும்  தேவை அவருக்கு இல்லை.பிழையான அபிப்பிராயங்கள் களையப்படவேண்டும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு குறுநிலக்கட்சி அல்ல அதற்கு 03 பாராளுமன்ற உறுப்பினர்களும் ,அதில் ஒருவர் அமைச்சர்.மற்றையவர் பிரதியமைச்சர் பல மாகாணசபை உறுப்பினர்களும்,பலநகரசபை,பிரதேசசபை உறுப்பினர்களும் உள்ளனர்.மலையகப்பகுதியிலும் பிரநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.முசலிப்பிரதேச சபையின் அதிகாரமும் ;இக்கட்சியின் கையிலேயே உள்ளது.இலங்கையின் எப்பகுதில் உள்ளவரும் இக்கட்சியின் செயற்பாடுகளால் கவரப்பட்டு கட்சியில் சனநாயக அடிப்படையில் இணைந்து கொள்ளலாம்.இதற்குப் பிழையான அர்த்தம் கற்பிக்கப்படத்தேவையில்லை.

வுடமாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்காக அமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக வடக்கின் சமயத்துறவியும்,இரு தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சருக்கெதிராக தமிழ் மக்களை பிழையாக வழிநடாத்தி ஆர்ப்பாட்டம் நடாத்துவதையும்,கண்டன அறிக்கை விடுவதையும் நாம் அறிவோம்.இதுவெல்லாம் ஏனெனில் வடபுலமுஸ்லிம்கள் மீளக்குடியேறிவிடக்கூடாது என்பதற்காகவாகும்.

இன்ஷாஅல்லாஹ் வடக்கு முஸ்லிம்கள் அனைவரும் விரைவில் குடியேறிவிடுவர் அதன்பின்னர் இம்மக்களின் வருகையினால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைச்சரின் கரத்தைப்பலப்படுத்துவோமாக...........................
சிறு நெருப்புப்பொறி எப்படி ஒரு பெரிய காட்டையே அழித்துவிடுகிறதோ அதேபோல எமக்குள் ஏற்படும் சிறுவிரிசல்கூட பேரினவாதிகளுக்கு எண்ணெய் வார்த்ததுபோல அமைந்துவிடும் என்பதை நாம் அனைவரும் அறிந்து செயற்படுவோமாக

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :