VV- ஹலால் சான்றிதழ் இனிமேல் இந்நாட்டிற்கு தேவை இல்லை.அரசாங்கத்தின் கீழும் ஹலால் சான்றிதழ் வழங்கும் விடயத்தை கொண்டுவர வேண்டாம். இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சிக்கி நெருக்கடியில் விழ வேண்டாம் என்று அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்கிறோம் என பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞாநசார தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உலமாக்கள் ஹலால் என்ற பெயரில் முறைகேடான குழ்ந்தை ஒன்றை பிரசவித்துள்ளனர்.அக்குழந்தைக்கு பிறப்பத்தாட்சிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் அரசாங்கத்துக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் பின்னால் செல்கிறார்கள்.
'ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருட்கள் ,சான்றிதழ் பெறப்படாத பொருட்கள் என இரண்டாகப் பிரித்து ஹலால் இலட்ச்சினை பொறிக்கப்பட்ட பொருட்களை முஸ்லிம்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அதற்கேற்றாற் போல் ஹலால் சான்றிதழ் வாழங்கப்பட வேண்டும்' என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கை நடைமுறை சாத்தியமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment