நாட்டின் நலனுக்காக
நாட்டில் இனிமேல் எந்த நுகர்வுப்பொருட்களிலும் ஹலால் இலட்சினை பொறிக்கப்படமாட்டாது. ஹலால் என்பது இலங்கையில் விருப்பத்திற்குரிய ஒன்று. நாட்டின் எதிர்கால நன்மை கருதியே இந்தத் தீர்மானத்தை எடுத்தோம் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா கட்சியின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம், பௌத்த பிக்குமார்கள் மற்றும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா ஆகியன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா கட்சியின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ளூர் நுகர்வுப் பொருட்களில் இனிமேல் ஹலால் இலட்சினை பொறிக்கப்பட மாட்டாது. ஆனால் இது நடைமுறையில் இருக்கும் என்பதோடு ஹலால் பொருட்களை நுகர்வோர் உபயோகிப்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
இதேவேளை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திப்பொருட்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஹலால் சான்றிதழை கட்டணமின்றி இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதனை நாம் விட்டுக்கொடுக்கவில்லை. நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளோம். எமது சமூகம் ஏனைய பிற மதங்களுடனும் மற்றும் சமூகங்களுடனும் சமாதானத்துடனும் ஐக்கியத்துடனும் புரிந்துணர்வுடனும் வாழ்வதையே விரும்புகின்றது.
ஹலால் விவகார தீர்மானம் என்பது ஒருசாராரின் வெற்றியோ அல்லது இன்னொருசாராரின் தோல்வியோ கிடையாது. மாறாக இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றி. இது தொடர்பான தெளிவுபடுத்தல்களை நாம் மக்களுக்கு விரைவில் வழங்குவோமென அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment