இவ்வாண்டு இறுதிக்குள் குடியியல் மற்றும் குற்றவியல் சட்டங்களைப் பொறுத்தவரை மகத்தான மாற்றங்கள் நிகழவுள்ளன. -நீதி அமைச்சர் ஹக்கீம்


(எம்.பைஷல் இஸ்மாயில்)

நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு உரிய தீர்ப்புகள் வழங்கப்படுவதற்கு காலதாமதம் ஏற்படுவதாக அநேகர் ஜனாதிபதிக்கு இவ்விடயத்தைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளனர். அவ்வாறு கிடைக்கப்பட்ட கடிதங்களை ஜனாதிபதி எனது கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இவ்வாறு ஏழாவது 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியோடு இணைந்ததாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) அம்பாறை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பயன்பாடுகள் பற்றிய செயலமர்வில் கலந்து கொண்டு நீதி அமைச்சர் றஊப் ஹக்கீம் அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


சட்டத்தரணிகள் மன்றத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் பங்குபற்றிய இச் செயலமர்வுக்கு அம்பாறை மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம். சஹாப்தீன், நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரிங்கி, நீதியமைச்சின் மேலதிகச் செயலாளர் லக்ஷ்மி குணசேகர ஆகியோரும்  முன்னிலை வகித்தனர்.

கடந்த ஆண்டு அநுராதபுரத்தில் நடைபெற்ற 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியின் போதும் அமைச்சரின் தலைமையில் இதே போன்ற செயலமர்வு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அங்கு அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் உரையாற்றகையில்,

வழக்குகளை தாமதமின்றி விசாரித்து முடிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 150 மில்லியன் ரூபா உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை. நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த நிதியை சரிவர பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்களினது ஒத்துழைப்புக்கள் மிகவும் அவசியமானது.
இவ்வாண்டு இறுதிக்குள் குடியியல் மற்றும் குற்றவியல் சட்டங்களைப் பொறுத்தவரை மகத்தான மாற்றங்கள் நிகழவுள்ளன. எனது அமைச்சின் கீழ் உள்ள அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயல்பாடுகள் வழக்குத் தாமதங்களை வெகுவாக குறைப்பதற்கு பெரிதும் உதவக் கூடியவை. அவை பற்றி இங்கு இரசாயன பகுப்பாய்வாளர், சட்ட மருத்துவ அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் விளக்கமளிப்பர்.

இவ்வாறான கலந்துரையாடலில் அம்பாறை கரையோரப் பிரதேச நீதிபதிகளும், சட்டத்தரணிகளும், பொலிஸாரும் முழுமையாக கலந்து கொள்வதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஜனாதிபதி அம்பாறையில் இருப்பதனால் பாதுகாப்பின் நிமித்தம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதன் காரணமாக அவர்களில் பலருக்கு இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போய் இருப்பதாக என்னிடம் வினயமாக எடுத்துக் கூறப்பட்டது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :