- ஆசிரிய ஆலோசர் எஸ்.எல். மன்சூர்
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அமைந்துள்ள பொத்துவில்; கோட்டத்தில் காணப்படும் பொத்துவில் மத்திய கல்லூரியில் ஆரம்பக்கல்வி வகுப்பறைச் செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது மாணவர்கள் கற்கும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளமை பிரமாதமாகும் என்று, அண்மையில் இப்பாடசாலைக்கு அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து ஆரம்பக்கல்விக்கான வகுப்பறைகளைப் பார்வையிடும் நோக்குடன் மதிப்பீட்டுப் பணிக்காக சென்றிருந்த அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் முயற்சி காரணமாக ஆரம்பக்கல்வி வகுப்பறைகளும், அங்கு கற்கும் மாணவர்களின் கற்றல் திறனும், மாணவர்களின் அடைவு மட்டங்களின் உயர்வு அதிகரித்துள்ளதாகவும் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் தெரிவிக்கின்றார். மேலும் அவர் கூறுகையில்,
இவ்வகுப்பறைகளில் மாணவர்களின் ஆக்கச் சிந்தனைகளும், ஆசிரியர்களது விடாமுயற்சியுடன்கூடிய அர்ப்பணிப்பும், தியாசிந்தனைகளும் ஒருங்கே அமைந்திருந்தன. இவ்வாறு வகுப்பறைகள் காணப்படுமிடத்து மாணவர்களின் ஆக்கவூக்க வெளிப்பாடுகள் காரணமாக கற்றலில் உத்வேகம் அடைவார்கள். இது மாணவர்களின் அறிவார்ந்த வியாபகப்பண்புகளை வெளிக்காட்டுவதுடன், அடுத்த பாடத்தினை விருப்புடன் கற்கின்ற ஒரு சூழ்நிலைக்குள் மாணவர்கள் உந்தப்படுகின்றார்கள் என்பதாகவும் தெரிவித்தார்.
உண்மையில் ஆரம்பக்கல்வி மாணவர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை உபகரணங்கள் ஊடாக கற்கின்றபோது கற்றல் தேர்ச்சிகளை அடைந்து கொள்வது இலகுவாக்கப்படுகின்றன. இவ்வாறு உரிய தேர்ச்சிகளை அடைந்து கொள்வதற்கு ஆசிரியர்கள் தங்களிடமுள்ள ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளை பயன்படுத்தும் மனோநிலையில் காணப்படுதல் அவசியமாகும். இன்று பொத்துவில் மத்திய கல்லூரியில் கல்வி பயிலுகின்ற ஆரம்பக்கல்வி மாணவர்கள் அந்த நிலையினை அடைந்து கொள்வதற்கு இங்குள்ள ஆசிரியர்கள் அதிகப் பிரயத்தனத்தை மேற்கொண்டு உரிய தேர்ச்சிகளை மாணவர்கள் அடைவதற்குரிய பல்வேறு செயற்பாடுகள் மேற்கொண்டுள்ளமை பாராட்டத்தக்கது. அந்த ஆசிரியர்களுக்கும்.
அவர்களை வழிநடாத்துகின்ற அதிபர்கள் மற்றும் வலயத்தலைவர்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும், இதுபோன்று ஏனைய ஆசிரியர்களும் தங்களது மாணவர்களின் அடைவினை உயர்த்ந்தும் நோக்குடன் செயற்படுதல் அவசியம் எனவும் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் தெரிவித்தார்.
(பார்வையிட்ட வகுப்பறைப் படங்களும், அங்குள்ள கற்றல் உபகரணங்களையும் படங்களில் காணலாம். )
0 comments :
Post a Comment