கொழும்பில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற அரசு சதி, -எதிர்கட்சி தலைவர் ரணில் கண்டனம்.


மாளிகாவத்தை ஆர்.பிரேமதாச மைதானத்துக்கான மேலதிக வாகன தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கு அப்பகுதியில் வாழும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பில்வத்தை எனும் அப்பகுதியில் வாழும் குடும்பங்களுள் பெரும்பாலானவை முஸ்லிம் குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது குறித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடும் ஆட்சேபனையையும் விசனத்தையும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வாழும் முஸ்லிம் மக்களை இங்கிருந்து  வெளியேற்ற அரசு வேலைத் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கை காரணமாக முஸ்லிம்கள் மட்டுமன்றி சிங்கள மற்றும் தமிழர்களும் பாதிக்கப்படப் போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆர்.பிரேமதாச மைதானத்துக்கான வாகன தரிப்பிடம் ஒன்றை அமைப்பது  தொடர்பில் மாளிகாவத்தை, அப்பில்வத்தை பிரதேசத்தில் பல குடும்பங்கள் வீடுகளை இழப்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்தலத்துக்கு விஜயம் செய்து அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு அதற்கமைய அமைக்கப்படும் ஒப்பந்தங்களில் மக்கள் கைச்சாத்திடக் கூடாது.
வீடுகளிலிருந்து வெளியேறுமாறு நகர அபிவிருத்தி அதிகாரிகள் உங்களை வவற்புறுத்தினால் அவர்களின் பெயர் விபரங்களை எனக்கு பெற்றுத் தாருங்கள்.
பிரேமதாச மைதானத்துக்கு வாகன தரிப்பிடம் அமைக்கப்படவேண்டுமானால் அதற்கு முன்னர் குறித்த குடும்பங்களுக்கு மாற்று வீட்டுத் திட்டம் ஒன்று கையளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இன்று இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் என்பவற்றை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ள அரசு மக்களுக்கு வீடொன்றினை சொந்தமாக்கிக் கொள்வதையும் தடுக்கும் வேலைத் திட்டம் ஒன்றினையும் முன்னெடுத்து வருகிறது.
மலே வீதியில் மக்கள் வீடுகளை இழந்த நிலையில் அங்கு இந்திய நிறுவனம் ஒன்றுக்கு இடம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
மக்களை அவர்களது வீடுகளிலிருந்து அப்புறப்படுத்த சட்ட ரீதியான எந்த அனுமதியும் கிடையாது. மக்கள் தமது வீட்டின் உரிமையை தொடர்ந்தும் பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி என்றும் மக்களுடன் இருக்கும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.MM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :