பொது பலசேனாவினால் முஸ்லிம் அடிப்படைவாதிகள் என்று இனம்காணப்பட்டவர்களை நாளை கோத்தபாய ராஜபக்‌ஷ சந்திக்கிறார்.


பொது பல சேனாவிவினால் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களாக பெயரிடப்பட்டுள்ள 10  முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்களையும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார்.

நாளைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு குறித்த சந்திப்பு  பாதுகாப்பு செயலாளரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் இடம் பெற்று வரும் நிலையிலேயே  இச்சந்திப்பு இடம் பெறவுள்ளது.

முன்னதாக குறித்த 10 இஸ்லாமிய அமைப்புக்களும் இலங்கையில் அடிப்படைவாதத்தை வளர்ப்பதாக பொது பல சேனா குற்றம் சாட்டியிருந்த்ததுடன் அவ்வமைப்புக்களுக்கு சவூதி உள்ளிட்ட  அரபு நாடுகளிலிருந்து நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவினரையும் பாதுகாப்பு செயலாளர் நாளையதினம் சந்திக்கவுள்ளார்.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி ஆகிய மூன்று பிரதேசங்களில் இருந்தும்  தலா ஒருவர் வீதம் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :