அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக வலயக் கல்விப்பணிப்பாளர்களுடனான கூட்டம் நேற்று கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தி;ல் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. நிஸாம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாகாண முதலமைச்சர் அப்துல் மஜீத் வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் மாணவ சமூகத்தின் நலனுக்காக செயல்படுத்தப்பட வேண்டிய நல்ல திட்டங்கள் சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை ஒழங்கு படுத்தியதாக பட்டியலிட்டு சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டதுடன் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் கல்வித் துறையின் அபிவிருத்திக்காக பாரிய வேலைத் திட்டங்களை முன்னடுத்துள்ளதாகவும், வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் இன்று சந்தோசமாக பாடசாலை சென்று கல்வி கற்பதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் இங்கு பேசம் போது குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment