நபிகளாரின் வாழ்க்கை வழிமுறைகளை மக்களுக்கு நினைவு படுத்தும் விழா.



(ஐ .எல். எம் சியாது)

தாராக்குடிவில்லு ஜும்மா பள்ளியின் ஏற்பாட்டில் 02-03-2013 அன்று நபிகளாரின் வாழ்க்கை வழிமுறைகளை மக்களுக்கு நினைவு படுத்தும் விழாவில் சிறப்பு அதிதியகக் கலந்து கொண்ட தாராவில் விகாரையின் éஜ்ய விகாராதிபதி சுவாமின்வஹன்ஸே பிரேமானந்த ஹிமி அனுசாசனா வழங்கும் போது நாம் பிரிந்து வாழக்கூடாது. பிரிந்து விடவும் கூடாது அதனால் எமக்கும் எமது நாட்டுக்கும் பாரிய இழப்பு ஏற்படும்.

சிறு வயதிலே சிறுவர்களுக்கு ஒற்றுமையை எல்லா மதத்தலைவர்கலும் போதிக்க வேண்டும் சிங்கள மக்கள் ஞாயிற்றுக்கிழமை பன்சல வருவது போல் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் பள்ளிக்கு வருகின்றனர் இதை மத போதகர்கள் ஒற்றுமை பற்றி போதிக்க சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் எனக்கூறினார்.

இவ்விழாவுக்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம். பீ. எஸ் யஹ்யா ஆப்தீன் ஆராச்சிகட்டு உறுப்பினர் எஸ் நிஜாம்தீன் மற்றும் புத்தளம் காதி நீதவான் நைனா முஹம்மது புஹாரி தாராவில் பன்சல நிர்வாக தலைவர் உபாலி சமரதுங்க உப தலைவர் கே தர்மரத்ன ஆகியோரும் மேலும் பலரும் கலந்து கொண்டனர்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :