பாராளுமன்றத்தின் நல்லொழுக்கம் கருதி ஜீன்ஸ் பேண்ட், 'டி' ஷர்ட் அணிவதற்கு தடை!!




ரஷ்ய பாராளுமன்றத்தின் நல்லொழுக்கம் கமிட்டி தலைவரும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் தலைவருமான அலெக்சாண்டர் டெக்ட்யாரேவ், 'பாராளுமன்றம் என்பது பொழுதுபோக்கு கூடம் அல்ல. ஜீன்ஸ் கூட பேண்ட்டைப் போன்ற ஒரு உடை தான். எனினும், ஜீன்ஸ் பேண்ட் - 'டி' ஷர்ட் அணிந்து அதன் மீது ஒரு மேலங்கியை போட்டுக்கொண்டு வரும்போது, அது 'சூட்' அணிவதைப் போன்ற ஒரு கண்ணியமான தோற்றத்தை ஏற்படுத்துவதில்லை.

சில எம்.பி.க்கள் அரசியல் ரீதியான மறைமுக விமர்சனங்கள் அடங்கிய வாசகங்களை அச்சிட்ட டி ஷர்ட்களை அணிந்துகொண்டு பாராளுமன்றத்துக்குள் நுழைகின்றனர்.

இதை போன்ற சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் எம்.பி.க்கள் இனி ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட்களை பாராளுமன்றத்துக்குள் அணிந்து வரக்கூடாது' என கூறியுள்ளார். JM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :