(எம்.ஐ.றியாஸ்)
தயட்டகிருல வேலைத்திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் இரன்டு மில்லியன் ரூபா நிதியொதிக்கீட்டின் மூலம் கோளாவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மீனவர் நிருவாகக்கட்டடம் கடந்த வெள்ளிக்கிழை(22.03.2013) இரவு 8.00 மணியளவில் கோளாவில் -01 செந்தாமரை கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் இ.துரைராஜா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத்தலைவருமான பி.எச்.பியசேனவின் அழைப்புக்கமைவாக் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் டாக்டர் ராஜிதசேனாரெத்தின பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இக்கட்டடத்தினை திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் கௌரவ அதிதியாகவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளர் நாயகம் சமிந்தடி சொய்ஷா கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கெட்டியாராச்சி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் மாவட்ட கடற்றொழில் உதவிப்பணிப்பாளர் கே.செல்வராசா கிழக்கு மாகாண மீன்பிடி பணிப்பாளர் எஸ்.சுதாகரன் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வை.எல்.எம்.பஜ்றூடீன்,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இக் கட்டடத்திறப்பு விழாவில் துறை சார்ந்த அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மீனவர் அமைப்பின் பிரதி நிதிகள் பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் 2 இலட்சம் டி.சி.பி.நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்கள் இதன் போது அமைச்சராலும் பாராளுமன்ற உறுப்பினராலும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment