இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் பொய் பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
நேற்று மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் அமைச்சர் தெரிவிக்கையில்,
இஸ்லாமியர்கள் அவர்களது மதத்தைப் பின்பற்றுவது அவர்களுக்குள்ள உரிமையாகும். அதனை தடுப்பதற்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க நேரிடும்.
இன்று இந்த நாட்டில் யுத்தம் இல்லை. மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கெதிரான ஹலால் பிரச்சினையினை ஏற்படுத்தி அதன் மூலம் இனவாதத்தை விதைத்து மனித சுதந்திரத்தை தடுக்கப்பார்க்கின்றனர்.
இந்த நாட்டினை வெள்ளையர்களிடம் இருந்து மீட்பதற்காக போராடியவர்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து செயற்பட முடியாது. இந்த நாட்டில் வாழும் அனைவரும் ஒரே தேசத்தின் மக்கள் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிப்பட தெரிவித்துள்ளார். இனி இந்நாட்டை இன, மத, மொழி, பிரதேச ரீதியாக பிரிக்க முடியாது. அதற்கு இடமும் கொடுக்கப்படமாட்டாது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.VV
0 comments :
Post a Comment