சவூதி அரேபிய அரசானது பொதுமன்னிப்பு காலம் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை.


சவூதி அரேபிய அரசானது பொதுமன்னிப்பு காலம் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

சவூதியில் வீசா காலம் நிறைவடைந்த நிலையிலும் அனாதரவாகவும் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் ஒன்று வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியனதைத்தொடர்த்தே தூதரகம் மேற்படி தெரிவித்துள்ளது.

சவூதி அரேபிய அரசானது பொது மன்னிப்பு குறித்து இன்னும் கலந்துரையாடி வருவதாகவும் இதுவரை தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும் சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் தொடர்பான ஆலோசகர் முதுமால தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொது மன்னிப்பு காலத்தில் மன்னிப்பை  பெற்று கொள்வது தொடர்பில் அநாதரவான இலங்கையர்கள் தூதரகத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று நிரப்பி  பாஸ்போர்ட்  அளவு புகைப்படங்கள் இரண்டு மற்றும் கடவுச்சீட்டின் பிரதி ஆகியவற்றையும் இணைத்து தூதரகத்தில் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தினால் விநியோகிக்கப்படும் குறித்த விண்ணப்பபடிவத்தை வெளியில் வேறு சிலர் பணத்துக்காக விற்பனை செய்வதாகவும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் தூதரகம் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.vv
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :