பொதுச்சொத்துக்களை யார் சுவீகரித்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் - கல்முனை முதல்வர் சீராஸ்

சட்டத்திற்கு விரோதமாக  யார் கட்டிடங்களை கட்டினாலும் காணிகளை சுவீகரித்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

இந்த  நடவடிக்கைகளின் ஊடாக பொதுச் சொத்துக்களை பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'இது எனது கடமையாகும். மக்களுக்காக இவ்வாறான நல்ல விடயங்களை நான் முன்னெடுக்கும் போது எந்த தீய சக்திகளின் எதிர்ப்பு வந்தாலும் நான் அவற்றுக்க அஞ்சாமல் மக்களுக்கு என்றும் சேவையாற்றுவேன்' என அவர் கூறினார்.

நேற்றும் இன்றும் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த விடயம் தொடர்பாக மேயர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

"பொதுச்சொத்துக்கள் மக்களின் சொத்துக்களாகும். இன்று நாம் இதன் மூலம் நன்மை அடைவது போன்று எதிர்கால சந்ததியினரும் இதன் மூலம் நன்மை அடைவார்கள். ஆகவே எதிர்கால இளம் சந்ததியினரின் நலன்கருதி நாம் இந்த சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும். இது  எல்லோரினதும் கடமையாகும்.

இந்த மைதானத்தை சுற்றி உள்ள அயலவர்களினால் மைதானத்தின் காணி சட்டவிரோதமாக சுவீகரிக்கப்பட்டு சுற்று வேலிகள் மற்றும் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதை  கல்முனை பிரதேச விளையாட்டு கழகங்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்தனா். இதனை தொடந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் வேலிகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தேன்" என்றார்.TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :