சென்னையில் இடம்பெறும் ஐ. பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடினால் பிரச்சினை மேலும் அதிகமாகும் சூழ்நிலை உருவானது.
எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில், இலங்கை வீரர்களை சென்னை போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ.க்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.
இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதி அளித்தால் மட்டுமே, ஐ.பி.எல். போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று ஜெயலலிதா திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதுதொடர்பாக ஐ.பி.எல் தலைவரும் மத்திய இணை மந்திரியுமான சுக்லா கூறுகையில், “உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரையை புறக்கணிக்க முடியாது. ஆனால், திட்டமிட்டபடி சென்னை மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடக்கும். வேறு இடத்திற்கு மாற்ற முடியாது” என்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு உள்ள எதிர்ப்பு தொடர்பாகவும், முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை தொடர்பாகவும் இன்று ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்போது, பாதுகாப்பு பிரச்சினை உள்ளதால், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில், சென்னை மைதானத்தில் 10 போட்டிகள் நடைபெறுகின்றன. ஐ.பி.எல். அணிகளில் 13 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உள்ளூர் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அகில தனஞ்செயா, நுவான் குலசேகரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இவர்கள் இருவரின் பெயரையும் நீக்க அணியின் உரிமையாளர் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.VV

0 comments :
Post a Comment