நாவல பிரதேசத்தில் பெளத்த மதத்தை நிந்தனை செய்யும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறி சிங்கள ராவய அமைப்பினரால் நேற்று வீடொன்று முற்றுகையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொது பல சேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பொது பல சேனா அமைப்புக்கும் சிங்கள ராவயவுக்கும் இடையில் மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தி இன்டிபென்டன் இணையத்தளத்துக்கு தெரிவித்த கருத்தில், சிங்கள ராவய அமைப்பினர் சொல்வதை கேட்பதில்லை எனவும் புத்த சிலைகளை அகற்றுவது, நிறுவனங்கள் மற்றும் வீடுகளை சுற்றிவளைத்து தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிங்கள ராவய அமைப்பினரிடையே ஒற்றுமை இல்லை எனவும் யாரவது தவறான தகவலொன்றை வழங்கும் பட்சத்தில் கூட உடனே ஸ்தலத்துக்கு சென்று பெளத்த மதத்தை அவமதிப்பதாக கூறி தாக்குதல்களை நடத்துவதாகவும் இது ஒரு முட்டாள் தனமான நடவடிக்கை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஞானசார தேரரின் குறித்த கருத்து மூலம் சிங்கள ராவய மற்று பொது பல சேனா ஆகிய அமைப்பினரிடையே மோதல் நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் சிங்கள ராவய அமைப்பினரின் கருத்தை அறிய முற்பட்டபோதும் அது இறுதிவரை பலனளிக்கவில்லை..
0 comments :
Post a Comment