2013 மார்ச் 11 இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்கையில் ஒரு முக்கிய நாள், தன் சமுக அரசியல் தலைவர்களின் மீது பாரிய நம்பிக்கை வைத்த நாள், நமது தலைவர்கள் நமக்கு எப்படியாவது ஹலால் உணவுகளை ஹலாலாக்கி தருவார்கள் என்று பெரும் நம்பிக்கை வைத்த நாள்,
இந்த சிங்கள அரசாங்கத்தை கடந்த ஜெனிவாவில் எங்கள் மன்றட்டதின் பெயரில் எங்கள் அரபு சகோதர நாடுகள் ஆதரித்தமைக்கு ஒரு நன்றிகடனவதவது எங்களுக்கு இந்த அரசாங்கம் ஹலால் உண்ண தரும் என்று நம்பி இருந்த நாள் இது...
துபாய் நகரில் காலை ஏழு மணிக்கு வேலைக்கு சென்ற எனக்கு ஒவ்வொரு நிமிடமும் ஹலால் பற்றிய தீர்மானம் என்ன என்ன என்பதை நினைத்து கொண்டே ஒரு பதட்டத்துடன் சென்றது, ஒரு மாதிரியாக வேலையை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக எனது வதிவிடத்தை செர்ந்தததும் முதல் கடமையாக எனது மடிக்கணணியை தட்டினேன்,
இடிவிழுந்தது. ஹலால் ஏற்றுமதி பொருட்களுக்கு மட்டுமே, நாட்டில் ஹலால் பொறி இல்லை.
என்னவொரு சாதுரியமான முடிவு, இந்த தலைப்பை பார்த்தவுடன் என் இதய துடிப்பு ஒரு கணம் நின்று விட்டது, இனிமேல் எங்களுக்கு ஹலாலான , உணவு கிடைக்காத?, ஹலால் உணவை எங்கு தேடுவது?, சந்தையில் ஹலாலாக்கும் ஹாரமுக்கும் எப்படி வித்தியாசம் காண்பது? என்ற கேள்விகள் ஓடினது தவிர இந்த தீர்மானத்திற்குரிய காரண கர்த்த யாரு? நமது சமுக, அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்ற அவசியமற்ற கேள்விகளை கேட்க எண்ணவில்லை. கேட்டும் அதற்கு பயனில்லை.
நான் ஒரு ஸ்ரீ லங்கன், நான் ஒரு லயன். என்று என் முக புத்தகத்தை வித்தியாசமான வரிகளை கொண்டும் புகைப்படங்களை கொண்டும் நிரப்பினேன். இப்போது நான் ஒரு ஸ்ரீ லங்கன் என்று சொல்ல என் உல் மனசு குசுகிறது, இந்த அவல நிலைக்கு என்னை தள்ளியவர்கள் யாரு?
சிங்கள இனவாதிகளே; எதற்காக இந்த சதி எங்களுக்கு? எதற்காக இந்த வலை வீச்சு எங்கள் மீது, நீங்கள் தோண்டிக்கொண்டு இருக்கின்ற குழியின் ஆழத்தின் முடிவு என்ன?
எங்களை அதில் புதைக்கும் வரை அந்த குழி தோண்டும் செயல் முடியாதோ உங்களுக்கு, ஆஹா, அது உங்களுக்கு இலகு பட்ட காரியமல்ல, எங்கள் தலைவர்கள் வேண்டுமானால் உங்கள் சுகபோகங்களுக்கு விலைபோயி இருக்கலாம், போராளிகள் நங்கள் இருக்கின்றோம் ஆல்லாஹ்வின் போராளிகள், போராடியே தீருவோம்.
ஆனாலும் புரியவில்லை எங்களுக்கு எதற்கான இந்த வேலைத்திட்டம் இது,
மேன்மை தங்கிய சனாதிபதி மகிந்தவை ஐ நா தண்டனையிலிருந்து விடுவிக்க எடுத்த புதிய திட்டமா இது. அமெரிக்காவின் மறு பெயரான இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தி கொள்வதுடன் அதனுடாக அமெரிக்காக்கு அழுத்தத்தை கொடுப்பதன் மூலம் தன்னை தப்பித்து கொள்ளுதல்.
எப்படி இஸ்ரேலுடன் ஒரு அழமான உறவை உண்டாக்குதல், அதற்குதான் இந்த முஸ்லிம்கள் பலிகிடாக்கள், முஸ்லிம்களுக்கு கஷ்டங்களை கொடுத்தால் அமேரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு கொண்டாட்டம். கடந்தகால அமைச்சர் பீரிசின் இஸ்ரேல் விஜயம் மற்றும் இஸ்ரேல் பிரதமரின் அரவணைப்பு அறிக்கை சான்று பகரும்.
அதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளா இது;
இல்லை, முஸ்லிம்களின் வதிவிட நிலைமைகளின் மீது கொண்டுள்ள கால்புன்ற்சியா இது; எங்கள் சொத்துகளின் மீது கொண்டுள்ள ஆசையா இது;
புரியவில்லை இன்னமும் புரியவில்லை எதற்கான இந்த சதி வேலை திட்டம், என்னதான் இந்த நாட்டிற்காக நங்கள் செய்யாவில்லை, நாட்டின் சுதந்திரத்தில் பங்கடுக்கவில்லையா? நாட்டின் அடித்து ஓய்ந்து போன முப்பது வருட கால யுத்தர்த்திர்க்கு பங்களிகவில்லையா? எங்கள் நிலம் விடு சொத்துகளை இழந்தோம், விரட்டியடிக்கபட்டோம், வேண்டுண்டோம், கொலையுண்டோம், இன்னும் எத்தனை துயரங்களை இந்த முப்பது கால யுத்தத்தில், எதற்காக இவையல்லாம் புலிகள் எங்களுக்கு செயய்தர்கள், உங்களை நங்கள் ஆதரித்தோம், நான் ஒரு முஸ்லிம் நான் ஒரு ஸ்ரீ லங்கன் என்ற எங்கள் அந்த தாரக மந்திரத்தை சொன்னதால்தான்.
இன்னமும் என்னதான் எங்களிடம் எதிர்பார்க்கிரிர்கள், எங்களுக்கு புரியவில்லை, நங்கள் உங்களை கையடுத்து கும்பிட வேண்டுமா? இல்லை காலில் விழுந்து வணங்க வேண்டுமா? எங்கள் இறைவன் ஆல்லாஹ்வை தவிர யாரின் முன்னாலும் தலைகுனிந்தது பலகினதில்லையா, இல்லை உலக அநேக முஸ்லிம்கள் எல்லோரும் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள் இலங்கை முஸ்லிம்கள் மட்டும் நிம்மதியாக இருக்கிறார்கள், அவர்களும் ஆயுதம் ஏந்தி போராடின எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையா அன்புள்ள இனவாதிகளே; தாங்க மாட்டிர்கள் இறைவன் மீது சத்தியமாக சொல்லுகிறோம் தாங்க மாட்டிர்கள், இந்த விளையாட்டு எங்களிடம் வேண்டாம்.
அதைதான் நீங்கள் எதிர்பர்கிரிர்கள் என்றால் அதற்க்கு நாங்களும் தயாராகத்தான் இருக்கிறோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம். ஆனால் அது எங்களின் நாட்டம் இல்லை.
இந்த முப்பது வருட அவல நிலை முடிந்து விட்டது என்று பார்த்தால், இன்னொரு வடிவத்தில் அதை சிங்கள இனவாதிகள் தொடருகிரிர்கள். ஆனால் ஓன்று மட்டும் புரிகிறது இது இந்த ஹலால் என்ற பதத்துடன் மட்டும் முடியப்போவது இல்லை, அதனால் நாம் உலமா சபையை நோகடித்து ஒன்றுமே நடக்க போவதில்லை, ஒரு சதத்திற்கும் பெறுமதி இல்லாத அரசியல்வாதிகளை குறைசொல்லியும் பயனில்லை.
உங்கள் அடுத்த நடவடிக்கையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம், அதற்க்கு எங்கள் பதில் வேறு விதமாக இருக்கும், அதற்க்கு நாங்கள் பொறுப்பாளிகள் இல்லை.
இப்படிக்கு
என் பந்தங்களுடன் ஹராமான உணவுகளை சேர்ந்து உண்ண துடிக்கும்.
Mohamed Hanees
Dubai
0 comments :
Post a Comment