ஹபாயா உடையில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் பிக்குகளுக்கு கிடையாது- தம்மிகா சில்வா


முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா உடையில் மூக்கை நுழைக்கும் அதிகாரம் பிக்குகளுக்கு கிடையாது என  சோஷலிஸ பெண்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தம்மிகா சில்வா தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
பொது  பல சேனாவின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
 
முஸ்லிம் பெண்கள் தமது கலாசாரத்துக்கு அமைய ஹபாயா அணிகின்றனர்.அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு.
 
இது விடயத்தில் பெளத்த பிக்குகள் தலையிட முடியாது. அந்த அதிகாரம் பிக்குகளுக்கு இல்லை.
 
பெளத்த  தர்மத்தை மீறி சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் பொது பல சேனா வுக்கு எதிராக பெளத்த மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.
 
ஹலால் விடயத்தில் மெளனம் காத்த அரசு ஹபாயா விடயத்தில் என்ன செய்யப்போகிறது என கேள்வியெழுப்பினார்.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :