அக்-அல்முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக உயர்தரத்தில் அளவையியல் ;பாடம் கற்பித்த ஆசிரியர் இடமாற்றம் பெற்றுக் கல்முனை வலயத்திற்கும் சென்றுள்ளார். இதனால் உயர்தரத்தில் கல்வி கற்கும் தரம் 12,13 ஐச் சேர்ந்த மாணவிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு நிறையவே உள்ளது.
இதே போல இப்பாடசாலையில் கடந்த காலங்களில் தமிழ்ப் பாடம் கற்பித்த ஆசிரியர் ஒருவர் இலண்டன் சென்றுவிட்டார். மற்றையவர் அதிபர் சேவைக்குச் சென்றுவி;ட்டார். இருந்த ஒரு ஆசிரியையும் பிரசவ விடுமுறையில் சென்றுள்ளார். இவ்வாறான ஒரு கள நிலையில் இம்முறை கா.பொ.த. சாதாரணதரப்;பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகள் பாதிக்கப்பட உள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பாடசாலை நிருவாகம்; , பாடசாலை அபிவிருத்திச் ;சங்கத்தினர் போன்றோர் வலயக்கல்வி அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையிட்டு பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment