பௌத்த மதத்தை பாதுகாக்கும் பொலிஸ் சீருடை அணியாத பொலிஸ்காரர்கள்தான் பொதுபலசேன இயக்கம்.-கல்கொட ஜானசேகர தேரர்


Bodu-Bala-Sena(அஸ்ரப் ஏ சமத்)
பௌத்த மதத்தை பாதுகாக்கும் பொலிஸ் சீருடை அணியாத பொலிஸ்காரர்கள்தான் பொதுபலசேன இயக்கம். நாங்கள் இந்த நாட்டில் நாலா பாகத்தில் பரந்து இருந்து எங்களது சீருடை அணியாத பொலிஸ் காரர்கள் படை  நியமிக்கப்பட்டுள்ளார்கள் என பொது பலசேன இயக்கத்தின் செயலாளர் கல்கொட ஜானசேகர தேரர் தெரிவித்தார்.

கொழும்பு 5 தும்முல்ல சந்தியில் உள்ள பொதுபலசேன இயக்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தாய்லாந்தில் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக சீருடை அணியாத பொலிஸ் படை ஒன்று இயங்கி வருகின்றது. அதே போன்று இலங்கையிலும் நாம் இயங்கி வருகின்றோம்.
எங்களது 12 கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து நாங்கள் செயற்படுகின்றோம். இந்த நாட்டில் 400 கிறிஸ்த்தவ என்.ஜி.ஓ.க்கள் உள்ளன. அவைகள் அனைத்தும் இந்த நாட்டில்  பௌத்த மதத்தை அழிப்பதற்கே செயல்படுகின்றன.
அரசிலமைப்பின் 9 ஆவது சர்த்தின்படி இலங்கை ஒரு பௌத்த நாடு, பௌத்த மதம் எனக் குறிப்பிட்டிருந்தும் அவற்றை மாற்றியமைக்க வேண்டும்.
இந்த அரசாங்கத்தில் உள்ள பிரபல அமைச்சர் ஒருவருக்கும் சொந்தமாக 48 மதுபானச் சாலைகள் இயங்கி வருகின்றன எனவும் தெரிவித்தார்.
மாளிகாவத்தையில் உள்ள தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தில் எமது தேரர் ஒருவரே காவி உடை அணிந்து ஆண் பிள்ளைகளை துஸ்பிரயோகத்தில் பாவித்து வந்தார். அவர் பொய்யான டிக்கட்கள் அரச முத்திரை ரப்பர் ஸ்டாம் போன்றவற்றை பாவித்து துஸ்பிரோயகள்களில் ஈடுபட்டு வந்தார். மற்றும் பௌத்த அமைச்சின் கீழ் உள்ள அறிக்கைகளும் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்தன.
தேரர் ஒருவர் ஒரு போதும் வீடுகளில் வாழ்வதில்லை. அவர்கள் பண்சலையியேலயே வாழ வேண்டும். அவர் பற்றிய தகவல்களை எங்களுக்கு முஸ்லீம் நண்பர்களே தெரிவித்தனர். அவர் வசித்த வீட்டினை நாங்கள் நடு இரவில் சென்று அவரது வீட்டை முற்றுகையிட்டு சகல அறிக்கைகளுடனும் அங்கு இருந்த 2 வாலிபர்களையும் கைது செய்து மாளிகாவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.
MP
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :