தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா



ஜமு.
இலங்கையில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியுமான திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், இது தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்கள் சிலருடன் சந்திப்புகளையும் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரின் ஏற்பாட்டில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரிகா பண்டார நாயக்க குமார துங்க இது தொடர்பில் பல தொகுதி ரீதியிலான சந்திப்புகளை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் இதன் முதல் சந்திப்பு இம் மாத இறுதியில் குருநாகலிலும் இரண்டாவது சந்திப்பு அநுராதபுரத்திலும் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இச்சந்திப்புகளில் தற்போதைய அரசில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிஸ்தர்களான இரு அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் உள்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது கணவரான விஜய குமார துங்கவின் நினைவு தினம் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு பேசிய சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க இந் நாட்டில் தேசிய அரசாங்கமொன்று அமைய வேண்டுமென வலியுறுத்தியதுடன் தற்போது பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்துவோர் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :