அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற ஒபாமா, முதல் முறையாக இஸ்ரேலுக்கு 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். மிக நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு சென்ற அவருக்கு ஜெருசலேமில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே அவர் பேசும்போது, “உலகில் உள்ள அனைவரும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டுள்ள நாம் இருவரும் இணைந்து நிற்போம்” என்று கூறினார்.
ஈரானின் அணுசக்தி உற்பத்தி மற்றும் சிரியாவின் உள்நாட்டு போர் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த நேரத்தில், ஒபாமாவின் இஸ்ரேல் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் அவர், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெஸ்ட் பேங்க் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு ஒபாமா பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
0 comments :
Post a Comment