கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பெரியநீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவையின் இறுதி நாள் நிகழ்வு.

(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பெரியநீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவையின் இறுதி நாள் நிகழ்வாக நேற்று (02.03.2013) மாலை  இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த மாதம் 16ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டிருந்த மேற்படி நடமாடும் சேவையின் மூலம் மக்களின் பல்வேறுபட்ட குறைகள் தீர்துவைக்கப்ட்டது. அத்தோடு குறித்த சுனாமி வீட்டுத்திட்டத்தின் சுற்றுப்புறங்களில் சிரமதான பணியும் மேற் கொள்ளப்பட்டது. இதன் இறுதிநாள் நிகழ்வாகவே இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த நாணயகார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, விசேட அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ.எம்.கருணாரத்னஉதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன்,சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம், தமிழ் பிரதேச செயலாளர்களான ஏ.எல்.எம்.சலீம், எம்.எம்.நௌபல், கே.லவநாதன், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. அத்தோடு நடமாடும் சேவையினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலை, கலாசார மற்றும் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :