பொத்துவில் மண்மேட்டு மலை புத்தர் சிலை பிரதிஷ்டை விவகாரமும் தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்று நேற்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட பெளத்த விகாரைக்குச் சொந்தமான இடத்தில் போதிய இட வசதிகள் இருந்தும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடத்துக்கு அருகில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்வதை தடுத்து நிறுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வர வேண்டுமென இப்பகுதி வாழ் மக்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேண்டுகோளை அடுத்து அமைச்சர் ஹக்கீம் அம்பாறையில் இரு தரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தாகவும் இதனடிப்படையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் நீல் த அல்விஸ் தலைமையில் நேற்று நடைபெற்றதாகவும் தெரியவருகிறது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாஉல்லா, பீ.தயாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹஸன் அலி, எச்.எம்.ஹரிஸ், பைஸல் காஸிம், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், பொத்துவில் பிரதேச சபைத் தலைவர் வாஸித், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன, பெளத்த தேரர்கள், உலமாக்கள் பொத்துவில் பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்கள், பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் சமூகப் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பொத்துவில் விகாரைக்குச் சொந்தமான இடத்தில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கும் அதற்கான பூரண ஒத்துழைப்பை முஸ்லிம்கள் வழங்குவதாகவும் இடப்பற்றாக்குறை ஏற்படுமிடத்து அருகிலுள்ள அரசுக்குச் சொந்தமான காணியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட செயலாளர்,பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் ஸ்தலத்துக்குச் சென்று இடத்தைப் பார்வையிட்டு அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.VV
0 comments :
Post a Comment