கண்டியில் நடந்து முடிந்த கூட்டத்தில் எமது சமூகத்தை இம்சிக்கும் வகையில் பல மோசமான கருத்துக்கள் கூறப்பட்டன. அதில் ஒருசில விடயங்களை உன்னிப்பாக கவனிக்கும் படி உரியவர்களின் கவனத்திக்கு கொண்டு வர நினைக்கிறேன்.
* எங்களுடைய பாதுகாப்பு செயலாளர் இருக்கும்வரை நாம் எதக்கும் அஞ்ச தேவையில்லை என பொதுபல சேனா பகிரங்கமாக குறிப்பிட்டது. அப்படியானால் அவர் பௌதர்களுக்கு மட்டுமா? பாதுகாப்பு செயலாளர் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு செயலாளர் இல்லையா?? இதனை உரியவர்கள் பாதுகாப்பு செயலாளரின் கவனத்துக்கு கொண்டு செல்வார்களா??
* முஸ்லிம் அமைச்சர்களை நாய்கள் என விமர்சித்தார் இதற்கு எமது அமைச்சர்கள் சொல்லும் பதில் என்ன? அவர் சொன்ன நாய்களில் எமது நாட்டின் நீதி அமைச்சரும் உள்ளடங்குவர் அப்படியானால் நீதிதுறை மூலம் இவர்களை நமது அமைச்சர்கள் வாய்மூட செய்யமுடியாதா??
* ஆசாத் சலிக்கும் எங்களுக்கும் கொடுக்கள் உள்ளதாக கூறினார். இது பயங்கரமான ஒரு கருத்தை கூறுகிறது. ஆசாத் சாலிக்கு எதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் அதற்கான முழுப்பொறுப்பும் இந்த பொதுபல சேனதான் சொல்ல வேண்டும். இதனை கட்டாயம் அரசும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படியாக ஒவ்வொரு விடயத்யும் கவனித்து உரியவர்களின் கவனத்துக்கு கொண்டு நல்ல ஒரு தீர்வை காண முடியும். JM
0 comments :
Post a Comment