ஊருக்குள் வந்த முதலையை பிடித்து மரத்தில் கட்டிவைத்த மக்கள்.


மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியிலுள்ள தர்மபுரம் கிராமத்தில் முதலையொன்று பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. கிராமத்திற்குள் புகுந்த முதலையை மடக்கி பிடித்த மக்கள் அதனை மரமொன்றில் கட்டிவைத்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பில் கிராமசேவகர் ஊடாக வனவிலங்கு காரியாலயத்திற்கு அறிவித்துள்ளனர்.

கடந்த மாதமும் இக்கிராமத்தில் புகுந்த முதலையை மக்கள் பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் புளியடிப்பால பிரதேசம் முதலைகளின் உறைவிடமாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பிரதேச மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
வெல்லாவெளி பிரதேசத்திலும் வாவி மற்றும் குளங்களை அண்டிய பிரதேசங்களிலும் முதலைகளின் தொல்லை அதிகரித்துள்ளதுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மை காலமாக முதளைகள் பொதுமக்கள் குடியிருப்பு பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் முதளைகளை கிராம மக்கள் மடக்கி பிடித்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :